அகாலம்

Spread the love

 

வீட்டைவிட்டு வெளியே செல்ல

முடிகிறதா

குடை எடுத்துச் சென்றாலும்

பாதி நனைந்து தான்

வீடு திரும்ப வேண்டியிருக்கிறது

சாலையில் யாரையும் காணோம்

ஆங்காங்கே சில கடைகள் தான்

திறந்திருக்கிறது

விடாமல் தூறிக்

கொண்டிருப்பதால்

சுவரெல்லாம் ஓதம் காத்து இருக்கிறது

கதகதப்புக்காக

பெட்டிக் கடையில் நின்று

சிகரெட் பிடிக்கிறார்கள்

குடிமகன்கள்

பளிச்சென்ற மின்னலைப் பார்த்து

காதை பொத்திக் கொண்டன

குழந்தைகள்

கண்ணெதிரே வாகனத்தின் மீது

விழுந்த மரம்

கையாலாகாததனத்தை எண்ணி

கண்ணீரை வரவழைத்தது

கொள்கை முழக்கமிட்ட

சுவரொட்டிகளுக்கெல்லாம்

தொண்டர்கள் குடை பிடிக்கவில்லை

புயலின் சீற்றத்தைக் கண்டு

பேயாய் அலறுகின்றன

சேனல்களெல்லாம்

அடைக்கலம் கொடுத்த அவன்

அவ்வப்போது ஆட்டுவிக்கின்றான்

கையேந்துபவர்கள் எல்லாம்

இளக்காரமாகத்தான் போய்விட்டார்கள்

கைலாசநாதனுக்கு.

 

mathi2134@gmail.com

Series Navigationதீபாவளியின் முகம்நுகராத வாசனை…………