அடையாளம்…

அருணா சுப்ரமணியன்

பூக்கும் பூக்கள் எல்லாம் 

பூஜைக்கு செல்வதில்லை..

பூவையரை அடைவதில்லை…

அவைகளின் 

மணமோ அழகோ 

அதனால் குறைவதுமில்லை..

தன்போக்கில் தன்னியல்பாய்

மலர்ந்துவிட்டுப் போகின்றன 

எண்ணிலடங்கா பூக்கள்…

யார் கண்ணிலும் படாது 

பூக்கும் பூக்களின் 

வண்ணங்களும் 

வடிவங்களும் 

கற்பனைக்கு அப்பாற்பட்டவை….

அடையாளங்களுக்கு 

ஆசைப்படாத 

மலர்களின் வாழ்வு தான் 

எத்தனை அற்புதமானது!!!

Series Navigationமனிதம் உயிர்த்த பெரு மழைஅப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : த. ஸ்டாலின் குணசேகரன் -அறிவார்ந்த சமூகம் உருவாக…