அந்தப் பார்வையின் அர்த்தம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
நடைப்பயிற்சியின் போது
அவன் இடது கையில் இருந்த
அரைக்கீரை கட்டைப்
பார்த்தது
அந்தக் கருப்பு வெள்ளை ஆடு
 
அதன் பக்கத்தில்
நின்று கொண்டிருந்தது
கருப்பு வெள்ளைக்குட்டி
 
அம்மா ஆட்டின் கண்களில்
யாசித்தல்
ததும்பி நின்றது
 
ஒரு கணம் யோசித்த அவன்
நொடிப் பொழுதில்
கீரைக்கட்டின் நாரை 
அவிழ்த்து உதற
அவை தின்னத் தொடங்கின
 
அவன்
நாளை
கீரை உண்டால் என்ன ? 
 
                 ++++++++++++
Series Navigationசைனா புதிய தனது விண்வெளி நிலையம் அமைக்க முதற் கட்ட அரங்கை ஏவி உள்ளது