ஆன்ம தொப்புள்கொடி 

This entry is part 12 of 14 in the series 20 நவம்பர் 2022

 

சி. ஜெயபாரதன், கனடா 

 

தொப்புள் கொடி  

ஒன்றா ?  இரண்டா ? 

அம்மா  

தொப்புள் கொடி ஒன்று.   

நீர்க் குமிழி யான  

வயிற்றில் 

தானாய் 

ஈரைந்து மாதமாய்  

என்னுடல் வடிவானது. 

கண், காது, வாய், மூக்கு, தலை 

கை, கால், உடம்பு 

தோல், முதுகு  எலும்பு  

உருவாயின 

ஒரு ஊமைப் பொம்மை !  

விழிக்காத விழிகள், 

பேசாத வாய், 

கேளாத செவிகள், ஆனால் 

காலால்  உதைக்கும். 

முழு வளர்ச்சி பெற்று 

 பூ உலகுக்கு  வந்ததும் 

சிசுவை 

ஆவென அலற  

வைத்தது, 

வானிலிருந்து 

மின்னலாய்  பாயும் 

ஆன்ம தொப்புள் கொடி

https://youtu.be/xgAbzNlpuY0

 

Series Navigationஅய்யனார் ஈடாடி கவிதைகள்முகவரி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *