இதய வடிவில் ஒரு பிரபஞ்சம்

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

இதய வடிவில் ஓர் அட்டையை

வெட்டி எடுத்தான் முகில்.

இதய வடிவில் ஒரு வயல்

இதய வடிவில் ஒரு குளம்

இதய வடிவில் ஒரு குடில்

இதய வடிவில் ஒரு மேகம்

இதய வடிவில் ஒரு வானம்

முகிலின் அட்டை வழியே

முழுப் பிரபஞ்சமும்

அன்புமயமாகிக்கொண்டிருந்தது!

 

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationகுறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டிநைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8