இனி

Spread the love

               ஜெயானந்தன்.
  என்னை என்று கொல்லப்போகின்றாய்.
  “தெரியாது”.
   நீ தான் கவிதையை படித்தவுடன்
   கிழித்து விடுகின்றாயே !
   ஏன் வானத்தையே பார்க்கின்றாய் ?
நி தேடும் நட்சத்திரம் அங்கு கிடைக்காது.
எல்லாம் எரி நட்சத்திரங்களே!
வாழ்க்கை புள்ளிகளாலும், கோடுகளாலும்
மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இன்று எல்லாம் ஜீயோமெட்ரிக் பெட்டகத்தில்
அடங்கிவிட்டது.
இனி கவிஞர்கள் வாழமுடியாது.
சாக்ரடீஸ்ஸீம், மார்க்ஸீம்
நேரத்தை நிரப்பிவிட்டார்கள்
செக்கு மாடுகள்
ஓட ஆரம்பித்து விட்டன..
கம்பனும், ஷெல்லியும்
நீயூட்டன் வகுப்பில்தான்
சந்திக்க வேண்டும்.
=======
Series Navigationஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 6 “ஹாங்காங் என்னைச் செதுக்கியது”ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2014 மாத இதழ்