இன்று தனியனாய் …

 

 

 
      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
குமார் கோபி
ராகுல் ஹரி
ரெங்கன் ரகுராம் ஸ்ரீராம்
பாபி அட்சயா எனப்
பல குழந்தைகளிடம்
நெருக்கமாகப் 
பழகியிருக்கிறான் அவன்
 
இப்போது எல்லா குழந்தைகளும்
வளர்ந்து
பெரியவர்களாகி 
எங்கெங்கோ இருக்கிறார்கள்
 
யாரையும்
அவன் மறக்கவில்லை
ஆனால் யாரும் அவனை
இப்போது நினைப்பதில்லை
 
குழந்தை உலகத்தில்
மகிழ்ச்சியில் திளைத்த
அந்தக் கணங்கள்
எங்கே ஓடி மறைந்தன ?
 
—- இன்று 
அவன் தனியாய்
அவர்களை
நினைத்துப் பார்க்கிறான்
அவர்கள்
குந்தைகளாகவே இருக்கிறார்கள் ! 
 
                         ++++++
Series Navigationஜன்னல்…படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்