இன்றைய அரசியல்

Spread the love

ப.தனஞ்ஜெயன்

நம்பிக்கையோடு நாட்கள்
சென்றுகொண்டிருக்கிறது
பெறுதலுக்காக
காத்திருக்கிறார்கள்
சில நேரம் பசியற்று
பெரும்பாலும் பசியோடும்காத்திருக்கிறது கண்கள்
திசை திருப்பும்
பேச்சுகளை மறந்து
தின செய்திகளையும்
ஆதார் அட்டையும்
திரும்பத் திரும்பப் பார்த்தாயிற்று
இருக்கைகளின்
நிதானமான பொய்களை
அறியாமலும்
கறை படிந்த சொற்களை
நம்பி
இன்னும் காத்திருக்கும்
அப்பாவி மக்களை
கடந்து செல்கிறது
இந்த ஐந்தாண்டு.

ப.தனஞ்ஜெயன்danadjeane1979@gmail.com

Series Navigationஅரங்கனுக்கு ஆட்பட்ட அரசர்வாழத் தலைப்பட்டேன்