இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்

1
0 minutes, 0 seconds Read
This entry is part 22 of 41 in the series 13 மே 2012

சிலவருடங்களுக்குமுன் எங்களூரில் ஒரு நாள் சாலையோரத்து காப்பிக்கடையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வினியோகித்துக்கொண்டிருந்தார். எனக்கும் கொடுத்தார். அது ஒரு மார்வாடி சேலைகளை விற்க வைத்த கண்ணீர் மடல் அல்லது கோரிக்கை. தான் மிகப்பெரிய வியாபாரியாக வடமாநிலமொன்றில் செழிப்பாக வாழ்ந்து வரும்போது திடீரென வியாபாரம் பெரும் நட்டத்தைச் சந்தித்ததாகவும், அதிலிருந்து தற்கொலை பண்ணலாமென யோசித்துப் பின்னர் எஞ்சிய சேலைகளையெடுத்துக்கொண்டு தமிழகத்துக்கு வந்து ஊர்ஊராக வந்து ஒன்றும் பெரிதாக நடக்கவில்லையெனவும் கடைசியில் இவ்வூருக்கு வந்து நகராட்சி மண்டபத்தில் துணிகளை காட்சிக்கு வைத்திருப்பதாகவும், இவை நீங்கள் வாங்காவிட்டால் தான் ரொமபவும் இடிந்துவிடப்போவதாகவும் நீங்கள் மனது வைத்தால் தான் வாழமுடியுமென்றும் அத்துண்டுபிரசுரம் சொல்லியது.

அங்கு நின்ற சிலர் சொன்னார்கள். மார்வாடிகள் அடிக்கடி வந்து இப்படி வியாபாரம் பண்ணுவதற்காக துண்டுப்பிரசுரங்களில் கற்பனையான சோகக்கதையைச் சொல்லி மக்களை இழுக்கிறார்கள்.

****

மதுரையில் வடக்கு மாசி வீதியிலிருக்கும் சக்தி சினிமாவில் அண்மையில் நான் பார்த்த ஒரு தமிழ்த் திரைப்படம் வழக்கு எண் 19/6. படத்தில் கதையைப்பற்றி எல்லாம் படித்திருப்பீர்கள். எனக்கென்னமோ நான் மேலே எழுதிய மார்வாடி நினைவுதான் வந்தது அப்படத்தைப்பார்த்து வெளியில் வந்த போது !

இன்னும் எத்தனை புது இயக்குனர்கள் இப்படி கிளம்பியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்னும் எத்தனை படங்கள் இப்படி வந்து செண்டிமெண்ட் பிச்சையெடுத்து வெற்றியடையலாமென நினைக்கும்?

அரசியல்வாதி தமிழரின் செண்டிமென்டல் மனப்பாங்கைப்பயன்படுத்தி வாழ்கிறான்: தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள்; மொட்டையடிக்கிறார்கள்; கைவிரலை, நாக்கை வெட்டிக்கொள்கிறார்கள்; மண் சோறு சாப்பிடுகிறார்கள்..

இனி இப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்காக, தயாரிப்பாளர் லிங்குச்சாமிக்காக, அல்லது, அப்படத்தின் நாயகன் சிரிக்காக, நாயகி மஹந்தாவுக்காக இவையெல்லாம் செய்யவேண்டியதுதான். மசாலா படங்களைவிட இப்படங்கள் தந்திரமாக ஏமாற்றிப்பிழைக்கின்றன.

சென்டிமெண்ட் வியாபாரம் கன ஜோராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. பலே தமிழ்ச் சினிமா !

****

Series NavigationAn evening with P.A.Krishnanசுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்
author

காவ்யா

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    அய்யா தமிழ் மணவாளன் என்பதும் காவ்யா என்பதும் ஒரு ஆளா…? சொன்னால் தேவலை. தமவா ஒரு பக்கம் வாழ்த்துப் பாட இந்த பக்கம் காவ்யா துகிலுரிக்கிறார். காவ்யா எனும் புனைப் பெயர் கொண்டு எழுதுவது வீரத்தை சமரசம் செய்யாமல் வெளிப்படுத்தும் என்பதற்கு 18/9 பற்றிய விமர்சனம் ஒரு எடுத்துக்காட்டு. பாட்ஷா, ச.க.வல்லவன், ஓகே ஓகே போன்ற படங்களுக்கு ஒரு பார்முலா இருப்பது போல் இன்று ஈரானிய , உலகசினிமா எனும் தரப்படங்களுக்கு ஒரு பார்முலா இருப்பதை முன்னொரு நாள் நல்ல படம் தந்த பாலாஜிசக்திவேலுக்கு கைவரப் பெற்றிருக்கிறது. 18/9 ஒரு பார்முலா படம். அதிலும் மசாலா கஃபே படத்திலும் இருவரில் ஒருவனுக்கு பொய் பேசத் தெரியாது என்பது போல் இதிலும் இருவரில் ஒருவனுக்கு பொய்பேச தெரியாது… என்ன கொஞ்சம் டார்க் டோனில் எடுக்க வேண்டும். கடைசியில் போலிஸ்காரன் பொறுமையாய் லெட்டர் படிக்க அந்தப் பெண் பர்தா போல் உடையில் காமிரா சும்மா சுத்தி சுத்தி வருவதன் காட்சியமைப்பின் ஒரிஜனல் பார்க்க… http://youtu.be/tkUrJheC8Bk இப்படித்தான் கொஞ்சம் காதல் கொண்டேன் தாக்கமும் இருக்கிறது. அதனால் தானோ என்னவோ படத்தில் ஒரு காதல் கொண்டேன் படத்தின் பாட்டும் வருகிறது. பாலாஜி சக்திவேல் பிழைத்துக் கொள்வார்… ஆனால் சீரியஸ் சினிமா…? காத்திருக்கத்தான் வேண்டும்… தைரியமாக உண்மை விமர்சனம் செய்த காவ்யாவிற்கு ஒரு சபாஷ்…. ( தமிழ் மண்வாளன் ஒரு கோழை காவ்யா, காவ்யா ஒரு வீர தமிழ் மணவாளன் – இருவரும் ஒருவரென்றால்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *