இரவின் முடிவில்.

Spread the love

இரவின் முடிவில்
புறாக்கள் பறந்தன.
நாகங்கள் புற்றுக்குள்
இரையோடு பதுங்கின.

இரவின் சோம்பலை விரட்ட
சூரிய கிரணங்கள் பாய்ந்தன.
நதியெங்கும் புனிதங்கள்
வாய் மூடிக் கிடந்தன.
நிர்வாண சடலங்கள்
சிதைகுள் வெந்தன.
மழைத்துளி பட்டு
பூமிக்குள் நடனம்.
நதியின் உதிரத்தில்
பயிர்களின் ராகம்.

மௌனமாய் யோகிகள்
தவத்தில் மூழ்கினர்.
வீதியெங்கும் சம்சாரிகள்
வீங்கிப்போய் அலைந்தனர்.

ஆதாம் ஏவாள்
மவுனமாய் சிரித்தனர்.
மீண்டும் சாத்தான்
பழத்தோடு அலைந்தன.

புழக்கடை கதவை
பதிவிரதை சாத்தினாள்.

இரவின் முடிவில்
மீண்டும் தூவினர்
ஜனன விதைகளை.

இரா. ஜெயானந்தன்.

Series Navigationபுதுக்கோட்டை இலக்கியப் பேரவை சார்பில் 33 அறிஞர்களுக்கு விருதளித்து பாராட்டிச் சிறப்பிக்கும் ஐம்பெரும் விழா வரும் 18 ஆம்தேதிகாந்தி சிலை