இருப்பதெல்லாம் அப்படியே …

Spread the love

 

 
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
இந்த வெற்றுக் காகிதம்
இப்படியே இருக்காது
இன்னும் சில நிமிடங்களில்
கவிதை வரிகளில்
நிரம்பி விடும்
 
இந்த நொடி
இப்படியே இருக்காது
இறந்தகாலக் கூட்டில்
தன்னைத் தானே ஒளித்துக்கொள்ளும்
 
தவழும் 
குழந்தையின் முயற்சிகள்
நடந்தும் ஓடியும்
தேடலைத் தொடரத்தான்
 
மகிழ்ச்சியான
காதல் திருமணம்கூட
மனக்கோணலால்
விவாகரத்தில் முடியும்
 
இன்று 
பூத்துக்குலுங்கும்  மரம்
நாளை விறகாகலாம்
 
—- இருப்பதெல்லாம்
அப்படியே இருப்பதில்லை.
Series Navigationரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் குக்குறுங்கவிதைக்கதைகள் – 13 – 20நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது.