இரும்புக் கவசம்

Spread the love

 

நாம் எழுப்பிய

சுவர்களுக்குள்

பத்திரமாயிருக்கிறோம்

 

மூடிய கதவுகளுக்குள்

அந்தரங்கத்தை

உணர்கிறோம்

 

புனையும் ஆடையில்

ரசனையைக்

காட்டுகிறோம்

 

பயணிக்கும் வாகனத்தில்

அந்தஸ்தத்தை

வெளிப்படுத்துகிறோம்

 

பயணங்களை

முடிவு செய்வதில்

அதிகாரத்தை

 

சுமையை

மறுதலிப்பதில்

சுதந்திரத்தை

 

சுமையைத்

தேர்ந்தெடுக்கும்

சுதந்திரம்

பழக்கப்பட்ட

குதிரைக்கும்

 

போர் முனையில்

ஆயுதபாணிக்கும்

இல்லை

 

சத்யானந்தன்

Series Navigationவெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்குருட்டு ஆசை