இருளும் ஒளியும்

Spread the love

 

இங்கே ஒளிக்கும்

இருளுக்கும் எப்பொழுதும்

இடைவிடாத போராட்டம்தான்.

 

ஒளிவந்தவுடன் எங்கோ

ஓடிப்போய் இருள்

பதுங்கிக் கொள்கிறது.

 

எப்பொழுது ஒளி மறையுமென

எதிர்பார்த்துக் கொண்டிருந்து

ஓடிவந்து சூழ்கிறது.

 

செயற்கையாக உண்டாக்கும்

ஒளிகள் எல்லாமே

ஒருநாள் சலிப்பு தட்டுகின்றன.

 

அவற்றின் போலித்தனத்தைக் கண்டு

ஆரவாரம் செய்தும்

அடித்து வீழ்த்தியும் இருளை

ஆராதிக்கிறார்கள்.

 

ஒளி இல்லாமல் வாழலாம்.

ஒருநாளும் இருள் இல்லாமல்

ஓய்ந்திருக்கலாகாது.

 

ஒளியும் இருளும்

ஒன்றோடொன்று கலந்ததுதான்

உண்மையும் பொய்யும்போல

 

 

 

Series Navigationஅஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் – இலங்கை  மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !சோமநாத் ஆலயம் – குஜராத்