உன்னைப்போல் ஒருவன்

 சங்கர் கோட்டாறு

 

உன்னை

எனக்கு

நன்றாகத்தெரியும்.

உனது

ஆசைகள், பாசாங்குகள்,

அவ்வப்போது வெளிப்படும்

வக்கிரபுத்திகள்,

எல்லாம் எனக்குமிக

நன்றாகத் தான் தெரியும்.

எப்படி என்றால்,

உன்னைப்போல்

ஓருவன்,

எனக்கு

வெகுநாளாக மிகவும்

பழக்கமானவன்.

நான்.

 

Series Navigationகவிதைகடல் நீர் எழுதிய கவிதை