உயிர்ப்பேரொலி

Spread the love
ரா.ராஜசேகர்

தூரத்தில் ஒலிக்கும்
உயிர்ப்பேரொலி
எங்கும் கேட்பதாய்ச் சொல்லும்
உன் செவிப்பறைகள் கிழிந்தே
பலகாலம்
அவதானிப்பில்
பார்க்கலாம்
பேசலாம்
கேட்கலாமுமா
அவ்வரிசையில் இப்போது
நீ இன்புற்றுக் கேட்பதாய்ச் சொல்லும்
அவ்வுயிர்ப்பேரொலியில்
கசிந்து வழிவது
உன் துரோகத்தின் ரணகானமே
என் மனமுதுகில் நீ செருகிய
துரோகக் குறுவாளால் மீட்டப்பட்டதே அக்கானம்
இப்போதெல்லாம்
உன் மனப்பண்பலை ஒலிபரப்பில்
தொடர்நேயர் விருப்பமாக
அத்துரோரகக் கானமே என
ரகசியக் குரலொன்று
அறிவித்துப் போகிறது
உயிர்வெளியெங்கும்
நானற்றப் பொழுதுகளிலும்
எது எப்படியோ
ஒரு துரோகம் இசையானதே
என்னாலும் உன்னாலும்
——-
ரா.ராஜசேகர்
சென்னை
9962925944
Series Navigationஇராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 1செய்தி