உரையாடல்

Spread the love

 

 

பசியாற இட்லி,தோசை?

சட்னிக்கு ஒன்றும் இல்லை

 

உப்புமா, பொங்கல்?

ரவா நெய் இல்லை

 

வரகுக்கூழ்?

வரகு இல்லை

 

மேகி மீ நூடுல்ஸ்?

வாங்கவேண்டும்

 

ஓட்ஸ்?

வாங்கவேண்டும்

 

ரொட்டி?

காலாவதி

 

பழையது?

தயிர் இல்லை

 

ஆச்சி கடை இட்லி?

இப்போது 8, திறப்பது 9

 

தேக்கா சந்தையில்

தேவைகள் வாங்கினால் உண்டு

 

இப்போதே 8. கூட்டம் 8.30

தாமதமாகுமே

பேச்சாளனே நான்தான்

 

என்னதான் முடிவு?

முடியவில்லை முடிவெடுக்க

 

எதைப்பற்றி பேச்சு?

முடிவெடுப்பதெப்படி?

 

அமீதாம்மாள்

Series Navigationபூமிக்கு அருகே வரும் நிரெஸ் விண்கல்லால் பாதிப்பு ஏற்படுமா?ஞானவாபி