ஊமையின்மனம்

ரோகிணி

_____________________
சிலசமயம் சிறகு
விரித்துக் கொண்டு
வானத்தில் பறந்து ம், 
சிலசமயம் சிறகு
சுருக்கிக் கொண்டு
கூட்டில் கிடந்தும்
அல்லாடும்…. 
 
அதற்கென்று தனி
மரமும் இல்லை
அதில் கூடும் இல்லை.. 
எனக்குள் இருக்கும் கூட்டில்
அது சென்றமர்ந்து
மேடைப் போட்டு பிரசங்கிக்க
நினைக்கிறது… 
 
ஆனால் வார்த்தைகள்
வரவில்லை, 
நரம்புகள் அறுந்து போன
தொண்டைக் குழியில்
எப்படி  வீணை வாசிப்பது? 
 
வராத வார்த்தைகளுடன்
சண்டை போடுவதை நிறுத்தி
கை நடனம் கற்றுக்கொள்ள
ஆரம்பித்தேன்…. 
 
Series Navigationயாதுமாகியவள்……குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்