எதிர்பார்ப்பு

Spread the love

அருணா சுப்ரமணியன் 


தினம் ஒரு 

சாக்லேட் தரணும் 

பள்ளி செல்ல 

மறுக்கும் குழந்தை…


ஒவ்வொரு கலர்லயும் 

ஒரு கார் வேண்டும்  

விளையாடும் 

சிறுவன் ..


எல்லா சப்ஜெக்ட்டும் 

கிளியர் ஆயிடனும் 

முட்டி மோதும் 

கல்லூரி காளை .. 

எந்தத் தேசத்திற்கும் 

செல்லத்  தயார்

நேர்முகத் தேர்வில் 

பட்டதாரி..


பார்க்க அழகா 

படிச்ச பொண்ணா 

பாருங்க தரகரே 

பொறியாளரின் 

பெற்றோர்!


கோடி ரூபாய் 

சம்பாரிப்பவனே 

மணாளன் 

காத்திருக்கும்  

படித்த அழகி!

Series Navigationதொடுவானம் 174. நான் பார்த்த பருவ மங்கைகவி நுகர் பொழுது-15 – கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’