அயன் கேசவன் 1.எதார்த்தமாய்ப் பார்க்கையில் யார்யாரோ முகங்கள் திருவிழாக்கடையின் கண்ணாடி 2.தெரியாத முகங்களை அறிமுகம் செய்கிறது திருவிழாக்கூட்டத்தில் எடுத்த புகைப்படம் -அயன் கேசவன்
தாண்டவக்கோன் ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது நடந்த அவருக்கும் அந்நகருக்குமான கொடுக்கல் வாங்கல்களை – நேர்ந்த அனுபவங்களை ஒரு நாட்குறிப்பைப் போல வெள்ளை அறிக்கையாகத் தந்திருக்கிறார். இத்தொகுப்பை வாசித்து முடிக்கும் யாருக்கும் வாழ்வின் மீது அதுவரை இல்லாத ஒரு புதுப் பாசம் வந்தே தீரும். அநேகமாக நாம் அனைவருமே நம் வாழ்விற்கு ஏதேனும் ஒரு குறிக்கோளை […]
பெண்ணைப் பார்க்க என்னை மலேசியா வரச்சொல்லி ஏர் இந்தியா விமான பிரயானச் சீட்டு அனுப்பியிருந்தார்கள். அதில் தேதி குறிப்பிடப்படவில்லை. எனக்கு விருப்பமான நாளில் பிரயாணம் செய்யலாம்.அதற்கு முன் சென்னை சென்று ஏர் இந்தியா அலுவலகத்தில் தேதியை நிச்சயம் செய்யவேண்டும். எனக்கு மலேசியா சிங்கப்பூர் சென்றுவர ஆசைதான். அங்கு நண்பர்களைக் கண்டு வரலாம். லதாவையும் பார்க்கலாம். அவள் எந்த நிலையில் உள்ளாள் என்பது தெரியவில்லை. அப்பா சொல்வதுபோல் லாபீஸ் சென்று அந்தப் பெண்ணையும் பார்த்து வரலாம். நான் சரியென்று […]
பி.ஆர்.ஹரன் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் விஷயம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. சில உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் உள்ளது. விலங்குகள் நல அமைப்புகள், “யானைகளைக் கோவில்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அவ்விடங்களில் அவைகளைச் சரியாகப் பராமரிப்பதில்லை; மேலும் கடுமையாகத் துன்புறுத்துகிறார்கள். கோவில் திருவிழாக்களில் அவைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. யானைகளை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று யானைப் பாகன்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் முறையாகப் பராமரிக்கிறார்களா இல்லையா என்பதைக் கோவில் தேவஸ்தானங்களோ, யானைகளின் உரிமைதாரர்களோ மேற்பார்வைப் பார்ப்பதில்லை. ஆகவே அவற்றை […]
அருணா சுப்ரமணியன் தினம் ஒரு சாக்லேட் தரணும் பள்ளி செல்ல மறுக்கும் குழந்தை… ஒவ்வொரு கலர்லயும் ஒரு கார் வேண்டும் விளையாடும் சிறுவன் .. எல்லா சப்ஜெக்ட்டும் கிளியர் ஆயிடனும் முட்டி மோதும் கல்லூரி காளை .. எந்தத் தேசத்திற்கும் செல்லத் தயார் நேர்முகத் தேர்வில் பட்டதாரி.. பார்க்க அழகா படிச்ச பொண்ணா பாருங்க தரகரே பொறியாளரின் பெற்றோர்! கோடி ரூபாய் சம்பாரிப்பவனே மணாளன் காத்திருக்கும் படித்த அழகி!
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) சுமதியையும் சுந்தரியையும் முதலில் கங்கா அழைத்துச் செல்லும் பெரிய அறையில் பதின்மர்ச் சிறுவர்கள் பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டவாறு உள்ளனர். சதுரக் கண்ணாடிகளின் ஓரங்களை ஒட்டி இணைத்தல், வகை பிரித்து அடுக்குதல், பெட்டிகளில் வரிசையாக வைத்தல், எண்ணுதல் போன்ற அலுவல்கள். அறையின் ஓர் ஓரத்தில் ஒரு தட்டெழுத்துப் பொறி காணப்படுகிறது. சுமதி, “கங்கா! இந்தச் சிறுவர்-சிறுமிகளுடன் நான் கொஞ்ச நேரம் இருக்க விரும்புகிறேன். நீங்கள் இப்போது போகலாம். சிறிது நேரம் கழித்து நான் […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ Cosmic Inflation by Quantum Inflatons & Outward Expansion https://youtu.be/blSTTFS8Uco https://youtu.be/QqjsZEZMR7I https://youtu.be/ANCN7vr9FVk https://youtu.be/5hzlMV8YVMg https://youtu.be/ascn8kUXO1c https://youtu.be/IcxptIJS7kQ https://youtu.be/ScVLrPVnk_E https://youtu.be/G-fjEY2PRls https://youtu.be/rfs1BAn7gI0 ++++++++++++++++++ Cosmic Inflation After the Big Bang +++++++++++++++++ பெரு வெடிப்பில் தோன்றிய பேபி பிரபஞ்சத்தின் அடித்தளம் கண்டார். பெரு வெடிப்புக்கு மூலமான கரு உருவான தெப்படி முதலில் ? வெறுமையில் கரு வடிவாகி உருவம் உண்டாகுமா ? அருவமாய்க் […]
தி.குலசேகர் தமிழ் மணவாளன் , கடந்த முப்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர். குறிப்பாகக் கவிதை குறித்த அவரின் செயல்பாடு இடையறாது நிகழ்ந்து கொண்டிருப்பது. என்னைப் போலவே ரசாயனப் படிப்பும், பெட்ரோ கெமிக்கல் துறையில் பணியாற்றும் அனுபவமும் கொண்டிருப்பவர். எளிமையானவர். உதவுவதில் மகிழ்வுறும் மனஈரம் கொண்டவர். தமிழின் மீதான காதலால் தமிழில் முதுகலை படித்தவர். கவிதையின் மீதான காதலால் அதில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவருக்குக் கவிதை சுவாசம். சங்ககாலக் கவிதைகளில் இருந்து, இந்தக் கால […]
பாரதி பள்ளியின் நாடகவிழாவிற்குச் சென்றபோது, மீண்டும் என்னை ஒரு சிறுவனாக நினைத்து சிறுவர் நாடகங்களை அனுபவித்து நினைவோடையில் நீந்த முடிந்தது. ஒருவிதத்தில் நாங்கள் சிறுவயதில் அனுபவிக்காத விடயங்கள் என்பதில் பொறாமை மதியத்து நிழலாக மனத்தில் படிந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலியா வந்தபின்பு ஆங்கிலத்தில் பார்த்து, படித்து சிறுவர் இலக்கியங்கள், நாடகம் மற்றும் சினிமாவை புரிந்து கொண்டபோது ,எமது நாடுகளில் முக்கியமாக தமிழ்மொழியில் வறுமைக்கோட்டின்கீழ் கவனிப்பாரற்ற ஒரு துறையாக உணர்ந்தேன். அதனால் பல முறை மனத்தில் ஏக்கம் ஏற்பட்டது. மொழி […]
+++++++++ பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [76] அடுத்தது கேட்கும் – ஏன், சீறிடும் கயவன் எவனும் உடைத்திலன் குடித்த குவளையை; குடத்தைப் பாசமாய், நளினமாய் வடித்தவன் உடைக்க வில்லையா பின்னேர்ந்த சினத்தில்! [76] Another said – ‘Why, ne’er a peevish Boy, Would break the Bowl from which he drank in Joy; […]