Posted in

எனக்குள் தோன்றும் உலகம்

This entry is part 3 of 19 in the series 15 ஏப்ரல் 2018

 எஸ்.ஆல்பர்ட்

திடுமென அழகு நிறைந்தது அந்த அளவு
பெரிய கண்ணாடி ஜன்னல் வெண்பனியை விளைத்திருந்தது
அருகருகே எதிரே சிவப்பு ரோஜாக்கள் மௌனமாக பொருந்தாமல்
கற்பனையைக் காட்டிலும் விரைந்து தோன்றும் உலகம்.

நாம் நினைப்பதைக் காட்டிலும் பித்தமுடையதாகவும் பெரியதும்,
திருத்தமுடியாத patippaலவும் ஆகக் காணும் உலகம்
ஒரு ஆரஞ்சை உரித்து சுளைவிரித்துத் தின்று விதைகளை
துப்பிவிட்டு veறு வேறாகத் தோன்றும் உலகின் மயக்கத்தை உணர்கிறேன்.

குமிழிடும் ஒலியுடன் நெருப்பு பிழம்பொக்கும் அலட்சியமும்
நாம் கருதுவதைக் காட்டிலும் வண்ணமும் நிறைந்தது உலகம்.
நாவில், விழியில், செவியில்,விரித்த கரங்களில்.
——————————————————————–

Series Navigation8 கவிதைகள்பின்தொடரும் சுவடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *