என்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்

முனைவர் ப. சரவணன்
1964ஆம் ஆண்டில் ரா. ஆறுமுகம் எழுதிய ‘கவலைக்கு மருந்து’ என்ற நாடகம் சுதேசமித்திரன் இதழில் வெளிவந்துள்ளது. பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றுவோர் அடையும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களையும் அக்காலப் பத்திரிகைத் ‘தர்மத்தை’யும் இந்நாடகம் எடுத்துரைத்துள்ளது.
‘வாடாமல்லி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் தன் சிந்தனைத் திறத்தையும் உதவியாசிரியர் சந்தானத்தின் மூளையுழைப்பையும் அச்சுக்கோர்ப்பாளர் கனகரத்தினத்தின் உடலுழைப்பையும் உறுதுணையாகக்கொண்டு பத்திரிகையை நடத்திவருகின்றார்.
தன் பத்திரிகை வாசகர் பலரையும் சென்றடையவேண்டும் என்பதற்காகப் பல்வேறு பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் துணிந்துசெய்கின்றார். இயன்றளவு பொருளாதாரத்தைச் சிக்கனப்படுத்த ‘வாடாமல்லி’ பத்திரிகையின் ஆசிரியர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்து அக்காலப் பத்திரிகையாசிரியர்களின் செயல்பாடுகள் என்று கருதமுடிகின்றது.
உதவியாசிரியர் சந்தானத்தின் தடுமாற்றங்கள் அனைத்தும் அக்காலப் பத்திரிகையாளர்களின் நிலை என்று உணரமுடிகின்றது. அச்சுக்கோர்ப்பாளர் கனகரத்தினத்தின் அலட்சியப்போக்குகள் அக்காலப் பத்திரிகை அலுவலர்களின் செயல்பாடாகவே எண்ணமுடிகின்றது. ஆக, இந்த நாடகம் அக்காலத்தில் பத்திரிகைத்துறையைச் சார்ந்தவர்களின் வாழ்வியல் போக்கை முழுமையாக எடுத்துக்காட்டுகின்றது.
அக்காலத்தில் பத்திரிகைகளின் பக்கங்களில் ஒரே துணையாசிரியர் பல்வேறு புனைபெயர்களில் வௌ;வேறு செய்திகளை எழுதுவது இயல்பான ஒன்றாக இருந்தது. அதனை இந்நாடகம், “முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டைவரை எல்லாம் என் சரக்காத்தானிருக்கு.” (ரா. ஆறுமுகம், கவலைக்கு மருந்து, வல்லிக்கண்ணன்ஃ முத்துக்குமாரசாமி (டிதா.ஆ.)ஃ சுதெசமித்திரன் இதர்; டிதாகுப்பஜஃ பகுதி ஒன்றுஃ ப. 1663) என்றும், “நம்ம பத்திரிகை முழுக்க நானேதானே பல பெயர்களிலே எழுதி வர்றேன். ஆண்கள் பகுதியிலே ‘சந்தானம்’இ விளையாட்டுப் பகுதியிலே ‘பயில்வான்’, இலக்கியப் பகுதியிலே ‘நக்கீரன்’, தமா~; பகுதியிலே ‘கோமாளி’, அரசியல் பக்கத்திலே ‘சவுக்கு’. இப்ப பெண்கள் பகுதிக்கு ‘சந்தான ல~;மியா’?” (முன்நூல்ஃ ப. 1662) என்றும் பத்திரிகைத் துணையாசிரியர் சந்தானம் கூறுவதன் வழியாகப் புலப்படுத்தியுள்ளது.
பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றுவோர் அடையும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களை; இந்நாடகம் எடுத்துரைத்துள்ளது. பத்திரிகைத் துணையாசிரியர் சந்தானம் பத்திரிகையாசிரியரிடம், “நான் வரும்போது இந்தப் பத்திரிகை ஐநூறுதான் அச்சாகி வந்தது. படிப்படியா இப்ப ஐம்பதாயிரத்துக்கு எட்டிட்டது. ஆனா….” (முன்நூல்ஃ ப. 1663) என்கிறார். அதற்குப் பத்திரிகையாசிரியர், “ஆனா உங்க சம்பளம் மட்டும் உயரலைன்னு சொல்லவர்றீங்களா? நீங்க எழுதுறதுக்கெல்லாம் யோசனை சொல்றது நான்தான் என்கிறதை நினைக்கலையே நீங்க?” (முன்நூல்ஃ ப. 1663) என்கிறார். பத்திரிகையின் விற்பனை, வருமானம் உயர்ந்தாலும் பத்திரிகையாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பதனை இவ்உரையாடல் தெரிவிக்கின்றது.
சந்தானம் தன் திறமை பற்றித் தன் மனைவி மரகத்திடம், “இந்தா, என்னைக் கையாலாகாதவன்னு நினைச்சுக்காதே. இன்னக்கே இந்தப் பத்திரிகை ஆபீஸை விட்டு வெளியேறினாலும், முந்நூறு ரூபாய் சம்பளம் போட்டு என்னை வைச்சுக்க எவ்வளவோ பேர் காத்திருக்கிறாங்க. இல்லை, சொந்தத்திலே பத்திரிகை ஆரம்பிச்சாலும் எடுத்த எடுப்பிலே லட்சம் பிரதிகள் விக்கும், என் பேருக்கு!” (முன்நூல்ஃ ப. 1668) என்று தன்னம்பிக்கையுடன் கூறுகின்றார். பத்திரிகையாளர்கள் திறமையுடையவர்களாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை வறுமையிலேயே உள்ளது என்பதனைச் சந்தானத்தின் மனக்குமுறல்வழியாக உணரமுடிகின்றது.
இந்நாடகம் அக்காலச் சமூகத்தில் பத்திரிகைகளின் தரமற்ற நிலையை எடுத்துரைத்துள்ளது. பத்திரிகைகள் வணிகத்திற்காக எதையும் செய்யத்துணிபவை என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆழமற்ற செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக வியக்கத்தக்கத் தலைப்புகளை இடுதல், வினா-விடை பகுதியில் மக்களை ஈர்ப்பதற்காகப் புதுமையான பதில்களை எழுதுவது போன்றவற்றை இந்நாடகம் சுட்டிக்காட்டிள்ளது. காலம் மாறினாலும் பத்திரிகைகள் தம்போக்கை இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதனைத் தற்காலத் தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
முனைவர் ப. சரவணன்

Series Navigationரௌத்திரம் பழகு!மனசா? உண்மையா?நம்பிக்கை. விளையாட்டுப் பிள்ளை