எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

Spread the love

 

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’களை வெல்லும் நூல்கள் பற்றிய விபரங்களை தற்போது இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்திருக்கிறது. அவற்றுள் ‘சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம்’ எனும் பிரிவில் இலங்கை ஊடகவியலாளரும், எழுத்தாளருமான  எம்.ரிஷான் ஷெரீபின் ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

வம்சி பதிப்பக வெளியீடான ‘அயல் பெண்களின் கதைகள்’ நூலில், சிங்கள மொழியில் எழுதி வரும் இலங்கையின் முக்கியமான பெண் எழுத்தாளர்களான சுநேத்ரா ராஜகருணாநாயக, தக்ஷிலா ஸ்வர்ணமாலி, கத்யானா அமரசிங்ஹ,  மனுஷா பிரபானி திஸாநாயக்க, சந்தனி ப்ரார்த்தனா ஆகியோரின் சிறுகதைகள் எம். ரிஷான் ஷெரீபால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்தன. ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் இந்த நூலுக்கு கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான ‘இந்திய வாசகசாலை விருது’ம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.  

Series Navigationபன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள் !ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன்