ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 19 of 19 in the series 30 ஜனவரி 2022

 

        

அழகியசிங்கர்

 

        

          தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?  எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?  

          என் சிறுகதை ஒன்று அந்தத் தொகுப்பில் வந்திருக்கிறது. அந்தப் புத்தகம் சாகித்திய அக்காதெமி கொண்டு வந்திருக்கிறது.  இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர் மறைந்த எழுத்தாளர் சா. கந்தசாமி.

          முழுவதும் தொகுத்து சாகித்திய அக்காதெமிக்கு எப்போதோ அவர் சமர்ப்பித்து விட்டார். ஆனால் அவர் இறந்தபிறகுதான் இத் தொகுப்பு வருகிறது.

“         கந்தசாமி உற்சாகமான மனிதர்.  அவர் புதுப்புது யோசனைகளைச் சாகித்திய அக்காதெமியில் புகுத்துவார். அப்படி வந்ததுதான் இரயில் கதைகள். 

          இத்தொகுப்பில் 30 கதைகள் உள்ளன. 

          இப் புத்தகத்தை முழுதாகத்தான் தயாரித்து விட்டுத்தான் போயிருக்கிறார் சா.கந்தசாமி. அவர் எழுதிய முன்னுரை இத் தொகுப்பிற்கு மகுடம் சாற்றுகிறது.

          அவர் எழுதியதைப் பார்ப்போம். அதில் பல ருசிகரமான தகவல்கள் இருக்கின்றன.

          – 1853 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கத்திய கம்பெனி இரயிலைப் புகைவண்டியை இந்தியாவிற்குள் ஓடவிட்டது.  மும்பையில் உள்ள போர் பந்தர் என்ற நகரத்திலிருந்து புதிய இரயில் பாதை அமைத்து மூன்று என்ஜின்கள் பூட்டிய பதினான்கு பெட்டிகளில் 400 பயணிகளோடு தானேவிற்கு ஓடியது.

          – இரண்டாவதாக இரயில் ஓடியது சென்னை.  1856ஆம் ஆண்டு ஜ÷ன் மாதம் 24 தேதியன்று மாலையில் ஆற்காடு நவாபின் தலைநகராக இருந்த சென்னை வாலாஜாவிற்கு இரயில் வெள்ளோட்டமாக ஓட விடப்பட்டது.

          – புகைவண்டி பயண எழுத்தாளரான பகடாலு நரசிம்மலு நாயுடு.  அவர் தன் குடும்பத்தினரோடு கோயம்புத்தூரிலிருந்து கல்கத்தாவிற்கு யாத்திரை மேற்கொண்டதை ஒரு சரித்திர பயணநூலாசிரியர் போலவே எழுதி உள்ளார்.

          – பின்னர் 1886ஆம் ஆண்டில் திவ்ய சேத யாத்திரையின் சரித்திரம் என்ற பெயரில் முதல் பதிப்பு வெளிவந்தது.

          – ஏ.கே.செட்டியார் இந்தியப் பயணம் முழுவதும் புகை வண்டி பயணம்தான்.   

          – தமிழறிஞர் திரு.வி.க புகைவண்டியில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வது நசகலோகத்தில் இருப்பது மாதிரி என்று தன் வாழ்க்கைக் குறிப்பில் எழுதி உள்ளார்.

          – எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் கும்பகோணம் வாசி.  அவர் புகைவண்டியில் பயணம் செய்தவர்.  அவர் எழுதினார், இரயில் ஜன்னல் பக்கம் இடம் கிடைத்துவிட்டால் போதும்.  எனக்குப் பரமானந்தம்.  வேடிக்கை பார்த்துக்கொண்டும், வெற்றிலை போட்டுக்கொண்டும் வருவது சுகமான பயணம்.  

          -துறவிக்குமேலான துறவியான வியோதஸ்போயின், அன்னாகரீனா பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் ரயில் முன்னே பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறான்.

          – இருநூறு ஆண்டுகளில் தரைவழிப் பயணத்தில் பெரும் சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார, இலக்கிய மாறுதல்களை  ஏற்படுத்திக் கொடுத்திருப்பது இரயில் என்று சொல்லப்படும் புகைவண்டிதான்.

          – தமிழின் முதல் புகை வண்டிக்கதை எழுதியவர் அ.மாதவையா.

          – கதைக்குக் காலம் கிடையாது; எந்தக் கருத்தைச் சொல்கிறது என்பது கூட இல்லை.  கதை ஒரு மொழியில்  சொல்லப்படுகிறது என்பதால் அதுவே கதைக்குப் போதுமானது இல்லை.  

          – வெகுஜனப் பத்திரிகை எழுத்தாளர்கள் தமிழ் வாசகர்கள் படிக்கத்தக்கவர்களாக இருந்தார்கள்.  அவர்களுக்கு எதிர்முகாமிலிருந்த அ.மாதவையா, புதுமைப்பித்தன், மௌனி, ஆர்.சண்முகசுந்தரம், க.நா சுப்பிரமணியம் எனலாம் அறியப்படாத எழுத்தாளர்களாக இருந்தார்கள்.

          – திராவிட எழுத்தாளர்களும், கம்யூனிஸ்ட் முற்போக்கு எழுத்தாளர்களும் அராஜக வாதி எழுத்தாளர்களும், இலக்கியத்தில் இடம் பெறவே தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.  இம்மாதிரி இலக்கிய ஒதுக்கல் மலையாள மொழி, வங்க மொழிகளில் நடைபெறவில்லை. 

          – தமிழ்நாட்டில் இலக்கிய ஒதுக்கல் காரணமாகச் சிற்றிதழ்கள் தோன்ற ஆரம்பித்தன. பகையும், பிளவும் அதிகரித்தது. 

          – தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் பலர் இரயில் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.  ரயிஙூன் கம்பீரம், கவர்ச்சி, அது ஓடிய வேகம், நின்ற தோரணை. அதில் சந்தித்த மனிதர்கள் பெற்ற அனுபவங்கள் கதைகள் எழுத வைத்திருக்கின்றன என்றே குறிப்பிட வேண்டும். அதனூடே இலக்கியத்தரம் என்னும் அடிப்படை அம்சத்தையும் கதைகள் பெற்று உள்ளன. 

          – தமிழில் இரயில் கதைகள் தொகுப்பு பற்றிய விமர்சனம் என் வேலையில்லை.   என் வேலை கதைகளைப் படித்துப் பாருங்கள் என்று சொல்வதுதான்.

          இதுதான் இத் தொகுப்பில் சா கந்தசாமி முன்னுரையில் எழுதிய சாராம்சம். 

          இனி இக்கதைகளைப் பற்றி அடுத்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறேன்.

 

                                                                                                    (இன்னும் வரும்)         

 

Series Navigationமுருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *