ஒரு துளி கடல்


சேயோன் யாழ்வேந்தன்

என் ஆடைகளை அவிழ்க்க விருப்பமில்லை
என் ஒப்பனைகள் கலைவதை விரும்பவில்லை
என் சுமைகளை இறக்கிட சம்மதமில்லை
உண்மையின் ஆழத்தைக் காணும் உத்தேசம் ஏதுமில்லை
உண்மை மாபெரும் கடல் போன்றதில்லை
அது ஒரு துளி நீர்தான்
என்றுனக்குப் புரியும்போது
நான் பருகிக்கொள்வேன்
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஇரவீந்திர பாரதியின் “காட்டாளி” – யதார்த்தமான சம்பவங்களின் பின்னல்பாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)