ஒரு வழிப்பாதை  

Spread the love

 

லாவண்யா சத்யநாதன்

மிட்டாய் கடையில்

நெய்யினிப்புகள் தின்றது தின்றதுதான்.

விளக்கெண்ணெய் குடிக்க

நேர்ந்தது நேர்ந்ததுதான்..

மல்லிகை முல்லை

மணத்தில் மகிழ்ந்தது மகிழ்ந்ததுதான்.

புளித்த திராட்சைகள்

புளித்தது புளித்ததுதான்.

இரைத்த வார்த்தை இரைத்ததுதான்.

நரைத்தமுடி நரைத்ததுதான்.

சர்க்கரை நோய் வந்தது வந்ததுதான்.

பிறவிப்பயன் வாழ்ந்ததுதான்.

திரும்பிப் பார்த்தால் துக்கம்

பார்க்காதே.

போய்க்கொண்டேயிரு.

போகும்வரை.

—-லாவண்யா சத்யநாதன்

Series Navigationதேமல்கள்கூந்தல் உள்ளவர்கள்   அள்ளி முடிகிறார்கள்