ஒளிப்பந்தாக இருந்த முகம்


– சேயோன் யாழ்வேந்தன்

முகம் மனம் காட்டும் கண்ணாடியாக இருந்தது
கண்ணாடி உருகும்முன் மணலாக இருந்தது
மணல் அலை கரைக்கும்முன் பாறையாக இருந்தது
பாறை மழை குளிர்விக்கும்முன் நெருப்பாக இருந்தது
நெருப்பு வெடிக்கும்முன் ஒளிப்பந்தாக இருந்தது
ஒளிப்பந்து பிறக்கையில் என் முகமாக இருந்தது.

Series Navigationதொடுவானம் 137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்