ஒளி மூலம்

 

 

குமரி எஸ். நீலகண்டன்

 

அண்ட வெளியில்

கோடிக் கணக்கான

மைல்களையும் கோள்களையும்

கடந்து விண்கற்களிலும்

தூசுத் துகள்களிலும்

சிந்தியும் சிதறியும்

சிதையாமல் வந்த ஒளி

மெல்லிய இமைகளின்

மூடலில்

ஊமையாகிப் போனது.

                                              

punarthan@gmail.com

 

 

Series Navigationகாற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ்