கனவில் வருகிறது !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
மீண்டும் மீண்டும்
கொட்டிக் கொட்டி அளந்ததில்
துயரங்களின் கொள்ளளவு
கூடித்தான் இருக்கிறது
 
எல்லா நிஜங்களும்
தம் நிழல்களை
என்னிடம்
தந்துவிட்டுப் போனது எப்படி ? 
 
கண்முன் தெரியும்
பசுமைக் கணநேரத்தில்
நிறம் மாறிப் போகிறது
 
என்முன் 
அணிவகுத்து நிற்கும் கேள்விகள்
ஏதோ ஒரு பதிலை
என்னிடம் யாசிக்கின்றன
 
மௌனத்தைப் பதிலாக்கியதில்
காலத்தின் இரைச்சல்
கூடிக்கொண்டே போகிறது
 
மணற்பிரதேசம் மறைந்து
நீர் சுழித்தோடும் 
ஆறொன்று அடிக்கடி
என் கனவில் வருகிறது !
 
Series Navigationதெற்காசிய நாடுகளில் விருத்தியாகும் பேரளவு-ஆயிரம் நிலவும் ஆயிரம் மலர்களும்