கனவு

 

ஆதியோகி

முன்பொரு இரவில்
முரட்டுக் கொசுவொன்றின்
மூர்க்கமான கடியில்
பாதியிலேயே நின்று போனது,
சுவாரஸ்யமான அந்த கனவு.

அதன் தொடர்ச்சியையும் முடிவையும்
அறிந்து கொள்ளும் ஆவலுடனே
உறங்கப் போகிறேன்,
அதற்குப் பிந்தைய
ஒவ்வொரு இரவிலும்…

மீண்டும்  ஒரு முறை
வருவதும் தொடர்வதும்
கிடையவே கிடையாதா
இடையிலேயே
கலைந்து போன கனவுகள்…?
                          – ஆதியோகி

+++++++++++++++++++++++++

Series Navigationபயத்தை உண்டாக்குதாயகக் கனவுடன்…