கம்பனின்[ல்] மயில்கள் -2

Spread the love

எஸ் ஜயலட்சுமி

 

சிந்தை திரிந்தது

                             உள்ளம் கலக்கம் கொள்ள ஆரம்பித்ததுமே ஆராய்ந்து பார்க்கும் அறிவு மழுங்க ஆரம்பிக்கிறது. உணர்ச்சி மேலோங்கி இருக்கும் சம யம் அறிவு வேலை செய்வதில்லை. குழம்பிய குட்டை யில் மீன் பிடிப்பது போல் கூனி அவள் மனதைக் கரைக்க ஆரம் பிக்கிறாள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கிணங்க கைகேயியின் தூய சிந்தையும் திரிய ஆரம்பிக்கிறது!

ஆனால் கூனியின் சாதுரியமான பேச்சினால் மட்டும் இது சாத்தியம் என்று நம்ப கவி ஞன் தயாராக இல்லை. வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்று அவற்றைக் கண்டு பிடிக்கிறான். வேறு காரணங்கள் என்ன? பார்ப்போம்.

 

தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி

தூய சிந்தையும் திரிந்தது—-சூழ்ச்சியின்

இமையோர்

மாயையும். அவர் பெற்ற நல்வரம்

உண்மையாலும்

ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத்தாலும்

 

என்று காரணங்களை அடுக்குகிறான். மனோ வாக்கு காயத்தால் தூயவளான கைகேயி தூய சிந்தை திரிய

 

 

 

 

 

தேவர்களின் வரங்களும், அரக்கர்கள் செய்த பாவங் களும் அந்தணர்கள் செய்த அருந்தவமும் எல்லாம்

சேர்ந்தே தூமொழி மடமானான கைகேயியின் சிந்தை

மாறக் காரணங்கள் என்றும் முடிவு செய்கிறான்

 

தேவர்களின் மாயையே கூனி யாக உருவெடுத்து வந்தாள் என்றும் கலைமகளே கைகேயியாக அவதாரம் செய்தாள் என்று சொல்வோ ரும் உண்டு. இராவணனுடைய கொடுமைகளால் வருந்திய தேவர்கள் திருமாலைச் சரணடைய, அவன் கருடன் மேல் தோன்றி, “தசரதன் மதலையாய் வரு தும்” என்று வரம் கொடுத்தான். இதைத்தான் இமை யோர் வரம் என்கிறான் கவிஞன்.

 

இப்படிப் பல காரணங்களால்

மனம் திரிந்த கைகேயி ”இனி என் மகன் பரதன் முடி சூட என்ன உபாயம்?” என்று கேட்கிறாள். பால் திரிந்து விட்டால் அது மீண்டும் பாலாக முடியாது. அதேபோல் தூய சிந்தை திரிந்த கைகேயி இனி ஒரு போதும் முன் போல் ஆகப்போவதில்லை திரிந்தது திரிந்தது தான். ஆனால் அதிலும் ஒரு நன்மை உண்டு என்கிறான் கவிஞன். தூய சிந்தை திரிந்ததால் தானே நமக்கு

இராமகாதை என்ற அமுதம் கிடைத்தது?

 

கைகேயியின் வரங்கள்

                             தூய சிந்தை திரிந்ததை

 

 

 

 

 

உணர்ந்த கூனி அளவற்ற மகிழ்ச்சியுடன், “நான் சொன்னபடி செய்தால் பதினாலு உலகங்களுக்கும் உன் மகன் அரசனாவான் என்று மீண்டும் தூண்டில் போடுகிறாள்.

தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்

தொலைவுற்ற வேலை

ஆடல் வென்றியான் அருளிய வரம்

அவை இரண்டும் கோடி

 

என்கிறாள். ”சம்பராசுரப் போரில் தயரதனுக்கு (நீ) சாரதியாய் இருந்த போது ஒரு இக்கட்டான சூழ் நிலையில் தன் விரலையே கடையாணியாகச் செய்து

மீட்டாள் கைகேயி அதனால் மகிழ்ந்த தயரதன் கைகே யிக்கு இரு வரங்களைத் தந்தான். அவற்றை வேண் டும்  போது பெற்றுக் கொள்வதாகக் கைகேயி கூறி யிருந்தாள். அந்த இரு வரங்களையும் இப்பொழுது கேட்டுப் பெற்றுக் கொள் என்று நினைவு படுத்து கிறாள் அவை என்ன வரங்கள்? கூனியே சொல் லட்டுமே

இரு வரத்தினில், ஒன்றினால்

அரசு கொண்டு, இராமன்

பெரு வனத்திடை ஏழ்—இரு

பருவங்கள் பெயர்ந்து

திரிதரச் செய்தி, ஒன்றினால்

செழு நிலம் எல்லாம்

ஒரு வழிப்படும் உன் மகற்கு

 

 

 

 

 

என்று வரங்களையும் சொல்கிறாள். இந்த இரு வரங் களின் தன்மையைப் புரிந்து கொண்ட கைகேயி,

“மன்னன் இவ்விரண்டு வரங்களையும் தராவிட்டால் அவன் முன்னே உயிர் துறப்பேன். நீ போகலாம்” என்று கூனியை அனுப்பி விடுகிறாள்.

 

கைகேயி ஆடிய நாடகம்

தனியே விடப்பட்ட கைகேயி

என்ன செய்யலாம் என்று யோசிக்கிறாள். அவளுக்கு இப்பொழுது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. தன் திருமணத்தின் போது கன்யா சுல்கமாக, கைகே யிக்குப் பிறக்கப் போகும் மகனுக்கு அரசுரிமை தருகி றேன் என்று சொல்லியிருந்தான் தயரதன். ஆனால் அதை மறந்து விட்டு இராமனுக்கு முடி சூட்டப் போகி றேன் என்கிறான். தான் கொடுத்த வாக்கை மீறினால் வாக்குத் தவறிய பழிக்குத் தயரதன் ஆளாக வேண்டி யிருக்குமே? ஏற்கெனவே அப்படிச் சொல்லிவிட்டு இப்பொழுது மீறலாமா? என்று சொல்லிக்காட்டாமல் கூனி சொன்னபடி வரங்களைக் கேட்டுப் பெற்றால்

தயரதனை ஒரு பெரிய இக்கட்டிலிருந்து மீட்டு விட லாமோ? என்றும் எண்ணுகிறாள்.

 

அன்று ஒரு இக்கட்டிலிருந்து

தயரதனை மீட்டதற்காகப் பெற்ற இரு வரங்களையும் இப்போது பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று

யோசிக்கிறாள். அரசவையில் அனைத்து அரசர்களுக் கெதிரே இராமனுக்கு நாளை மகுடாபிஷேகம் என்று

 

 

 

 

 

அறிவித்து விட்டான். அவன் கைகேயிக்குக் கொடுத்த கன்யா சுல்கத்தை மறந்து விட்டான். இப்பொழுது அவனே வரத்தை மாற்ற வேண்டும். அதற்குக் கைகே யியும் துணை போக வேண்டும். என்ன செய்யப் போகிறாள் கைகேயி?

 

கைகேயி கொண்ட கோலம்

                                தன் கூந்தலிலிருந்த பூ மாலையைப் பிய்த்து எறிகிறாள். இடுப்பில் கட்டி யிருந்த மேகலையை அறுத்தெறிகிறாள். கை வளை யல்களைக் கழற்றுறாள். மறுவில்லாத சந்திரன் போலிருந்த முகத்திலிருந்த திலகத்தை அழிக்கிறாள். ஒரு பெண் எதையெல்லாம் செய்யக் கூடாதோ, எதைச் செய்தால் அமங்கலம் நிகழும் என்று சொல் வார்களோ அதையெல்லாம் செய்கிறாள். இப்படிச் செய்தால் தான் தயரதன் கவனத்தைத் தன் பக்கம் திருப்பலாம் என்று எண்ணுகிறாள். எப்படியாவது

ராவண வதம் நிகழ வேண்டும். அதற்கு இராமன் வனம் போக வேண்டும். அதற்கும் கைகேயி உதவ வேண்டும். விளவு எதுவானாலும் அதை ஏற்க கைகேயி தயாராகி விடுகிறாள். கலைமகளின் அவ

தாரமாகவே வந்திருக்கும் கைகேயி தன் சுய ரூபத்தை மறைத்துக் கொண்டு நாடகமாட வேண்டும். நடிக்க வேண்டும். நாடகமாட கைகேயி தயாராகி விட்டாள்.

 

தா இல் மாமணிக் கலன் மற்றும்

தனித்தனி சிதறி

 

 

 

நாவி ஓதியை நானிலம்

தைவரப் பரப்பி

காவி உண்கண் அஞ்சனம்

கான்றிடக் கலுழா

பூ உதிர்ந்தது ஓர் கொம்பு என

புவிமிசைப் புரண்டாள்.

 

[தா இல் மாமணிக்கலன்—மணிகளால் ஆகிய அணி கலன்.    நாவி ஓதியை—-நெய் பூசப்பட்ட கூந்தல்.   நால் நிலம் தை வரப் பரப்பி—தரையிலே புரளும் படி.   அஞ்சனம் கான்றிட—மை கரையும்படி]

 

நாடக மயில்

                         இந்த இடத்தில் கம்பன் கைகே யியை நாடக மயில் என்கிறான். ஓடும் மானையும்

ஆடும் மயிலையும் போன்ற கைகேயி தன் இயல்பு ஒழிந்து தரையில் தூங்குவது போல நடிக்கிறாள்.

 

நவ்வி வீழ்ந்தென்ன நாடகமயில்

துயின்றென்ன

 

தரையில் தலைவிரி கோலமாகக் கிடக்கிறாள். இராம னுக்கு முடி சூட்டப் போகும் விஷயத்தைத் தானே நேரில் சொல்ல வேண்டும் என்று வருகிறான் தய ரதன். கைகேயி தரையில் கிடக்கும் கோலத்தைக்

கண்டு திடுக்கிட்டு மானை எடுக்கும் யானை போல்

 

 

 

 

 

 

கைகேயியைத் தழுவி எடுக்கிறான். மன்னன் கை

களை விலக்கிய கைகேயி மின்னல் கொடி துவண்டு விழுவது போல் தரையில் விழுகிறாள். கைகேயி கோபத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்த மன்னன் அவளைத் தேற்ற நினைத்து, “என்ன நிகழ்ந்தது? உன்னை இகழ்ந்தவர் மாள்வர். இது நிச்சயம் என்று உறுதியளிக்கிறான்.

இதைக் கேட்ட கைகேயி என் மீது உனக்குக் கருணை யிருந்தால் முன்பு எனக்குத் தருவதாகச் சொன்ன இரு வரங்களையும் இப்பொழுது

தர வேண்டும் என்கிறாள். கைகேயி தனக்கு அதிர்ச்சி தரப் போகிறாள் என்பதை அறியாத தயரதன், “உன் மைந்தன் இராமன் மேல் ஆணை” என்கிறான். உயிர் போன்ற இராமன் மேல் ஆணையிட்டதால் மன்னன் மாற மாட்டான் என்பதை அறிந்த கைகேயி, மன்னா! நீ அன்று தந்த வரங்கள் இரண்டையும் தர வேண்டும்

என்கிறாள். என்னவோ ஏதோ என்று திகைத்திருந்த தயரதன் நிம்மதியடைந்து, இதற்கு இவ்வளவு பீடிகை ஏன்? இப்பொழுதே கேள் தயக்கம் வேண்டாம் என்று அவசரப் படுகிறான். கொஞ்சமும் தயக்கம் இல்லாமல்

 

ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்

சேய் அரசாள்வது, சீதை கேள்வன் ஒன்றால்

போய் வனம் ஆள்வது,

 

என்று சொல்லி விடுகிறாள். முன்பு இராமனை என்

 

 

 

 

மகன் என்று சொன்னவள் இப்பொழுது தயரதனிடம் உன் மகன் என்று கூடச் சொல்லவில்லை. கோசலை செல்வன் என்றும் சொல்லவில்லை. தங்களுக்கு சம் பந்தமே யில்லாதவன் என்பது போல, யாரோ அயலார் போல, சீதை கேள்வன் என்கிறாள். ஆனால் இதை யெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் மனநிலையில் தயரதன் இல்லை. தூமொழி மடமான் என்று போற் றிய கவிஞனே மனம் கொதித்துப் போய் கைகேயியை

தீயவை யாவினும் சிறந்த தீயாள் என்கிறான். அந்த அளவுக்கு மயில் நாடகமாடத் தொடங்கி விட்டது!

 

தயரதன் தவிப்பு

                          கைகேயியின் சொல் காதில் விழுந்ததுமே தயரதன் விஷ நாகம் தீண்டிய யானை போல் வீழ்கிறான். பெருமூச்சு விடுகிறான்.எழுகிறான்.

விழுகிறான் மீண்டும் எழுகிறான். கைகேயியை அப்

படியே மோதிக் கொன்று விடலாமா என்று நினைக் கிறான். ஆனால் ஒரு பெண்ணைக் கொல்வது பெரும்

பழி என்று நாணுகிறான். இராமனைத்தவிர உயிர் வேறிலாத மன்னன் என்ன பாடு படுகிறான்?

 

ஆ கொடியாய்! எனும் ஆவி காலும் அந்தோ!

ஓ கொடிதே அறம் என்னும்

கையொடு கை புடைக்கும்; வாய் கடிக்கும்

மெய்யுரை குற்றம் எனப் புழுங்கி விம்மும்

 

இந்நிலைக்கு ஆளாக்கிய இவளைக் கொன்றால் தான்

 

 

 

 

 

என்ன? என்று பொங்கி எழுகிறான் ஆனால் என்ன அவலம்! கைகேயியின் காள்களில் அல்லவா விழு கிறான். அதட்டிப் பேசுவதை விட அடங்கி, கெஞ்சி இறைஞ்சி அவள் எண்ணத்தை மாற்றலாம் என்று  “உன் மகன் நீ நினைப்பது போல் இவ்வரசை ஏற்க மாட்டான். ஒருவேளை அவன் ஏற்றுக் கொண் டாலும் இந்த உலகம் அதை ஒப்பாது. வீணாக ஏன் பழி கொள் கிறாய்? தேவர்களும் இம்முடிவை ஏற்க மாட்டார்கள். மண்ணுலகில் உள்ளவர்களும் உயிர் வாழ மாட்டார் கள். நீ யாரோடு அரசாளப் போகிறாய்? பரதன் நாடாள வேண்டுமென்றால் ஆளட்டும் அதற்காக இராமன் காடு செல்ல வேண்டாம். அவனே உன் மகனுக்கு நாட்டைக் கொடுத்து விடுவான் என்று மன்றாடு கிறான்.

கேகயன் மானே! [மகளே} உனக்கு

என் கண் வேண்டுமென்றாலும் தருகிறேன் ஏன்? என் ஆவி வேண்டுமானாலும் தருகிறேன் ஆனால் என் கண், என் உயிர் போன்ற இராமனைப் பிரிவதை மாத் திரம் கேட்காதே.    மண்ணே கொள், மற்றையதை மற.  பேயும் ஈயும், நீ இரங்கக் கூடாதா? என்று இரந்து நிற் கிறான். எத்தனை எத்தனை தேசத்து அரசர்கள் அயோத்தி அரண்மனை முற்றத்திலே வந்து கப்பம் கட்ட காத்திருப்பார்கள்! ஆனால் அந்த தசரத சக்கர வர்த்தி இன்று கைகேயியின் காலில் விழுந்து கெஞ்சு கிறான்!

பரதனே ஆளட்டும் ஆனால்

 

 

 

 

 

இராமனை வனம் போகச்சொல்ல வேண்டாம். என் கிறான். ஆனால் இராமன் அயோத்தியில் இருந்தால் பரதன் நிம்மதியாக ஆள முடியுமா? இராமனே பெருந் தன்மையோடு விட்டுக் கொடுத்தாலும் அவனைச் சேர்ந்தவர்களும் அவனுடைய ஆதரவாளர்களும் சும்மா இருப் பார்களா? அதனால் இராமனை நாட்டை விட்டு எப்படியும் அப்புறப் படுத்த வேண்டும் என்பதே கூனி, கைகேயி இருவருடைய எண்ணம். Out of sight is  out of mind என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு பொருள் கண்ணெதிரில் இருந்தால் அதன் தாக் கம் அதிகமாக இருக்கும் ஆனால் அந்தப் பொருள் கண்ணை விட்டு மறைந்து விட்டால் அதன் தாக்கம் அவ்வளவாக இருக்காது. காலப்போக்கில் அது மறக் கப் பட்டு விடும். இந்த அடிப்படை உண்மையைத்

தெரிந்து  கொண்டுதான் கூனி இராமன் வனம் செல்ல வேண்டும் என்கிறாள்.

தயரதன் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் கைகேயி தயங்காமல்

 

முன்னே தந்தாய், இவ்வரம்

நல்காய், முனிவாயேல்

என்னே? மன்னா! யார் உளர்

வாய்மைக்கு இனி?

 

என்று, எதைச் சொன்னால் தயரதன் வாயடைத்துப் போவானோ அந்த வார்த்தையைக் கவனமாகக் கை

யாள்கிறாள்.

 

 

 

ஒரு வரம் தருகிறேன்.

                            இதற்குப்பின்னும் தயரதன்

 

”நின் மகன் ஆள்வான், நீ இனிது ஆள்வாய்

நிலம் எல்லாம்

உன் வயம் ஆமே; ஆளுதி தந்தேன்

உரை குன்றேன்

என் மகன், என் கண், என் உயிர்,

எல்லா உயிர்கட்கும்

நன் மகன் இந்த நாடு இறவாமை

நய

 

என்று ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற விழை கிறான். பரதன் நாடாளட்டும், நீயும் ஆளலாம். உல கமே உன் வசம் ஆகும். என் கண், என் உயிர் போன்ற இராமனை மட்டும் இந்த நாட்டை விட்டுப் போகச் சொல்லாதே. எனக்கு உயிர்ப்பிச்சை கொடு என்று மன்றாடுகிறான். “தந்த வரத்தை தவிர் என்றால் அது அறம் ஆகுமோ? தந்த வரம் முறையானது என்று சொல்லாவிட்டால் நான் உயிர் விடுவேன் என்கிறாள் நெஞ்சில் ஈரம் அற்றுப்போன கைகேயி. தயரதன் துடித்துப் போய்

 

ஈந்தேன்! ஈந்தேன்! இவ்வரம்

என் சேய் வனம் ஆள

மாய்ந்தே நான் போய் வான் உலகு

ஆள்வென், வசை வெள்ளம்

 

 

 

 

நீந்தாய் நீந்தாய் நின் மனொடும்

நெடிது!

என்று சாபமிடுகிறான் அப்படியே மயங்கி விடுகிறான். நாடகமாடிய மயிலும் அயர்ந்து போய் துயில்கிறது!

 

பாபம் முற்றிய பேதை செய்த பகைத்

திறத்தினில் வெய்யவன்

கோபம் முற்றி மிகச் சிவந்து

 

கீழ் வானிலே தோன்றுகிறான்.

 

கைகேயி அழைக்க

ராமன் வருதல்         

                           சோதிடர்கள் முகூர்த்த நேரம்

நெருங்குகிறது என்று அறிவிக்கவே சுமந்திரன் மன் னனை அழைக்கச் செல்கிறான். மன்னன் கைகேயி அரண்மனையில் இருப்பதை அறிந்து அங்கு செல் கிறான். இதற்குள் தூக்கத்திலிருந்து எழுந்த கைகேயி தன்னைத் தயார் செய்து கொண்டு விடுகிறாள். வந்த சுமந்திரனிடம் இராமனை அழைத்து வரும்படி சொல் கிறாள். ஆசி கூறவே அழைப்பதாக நினைத்து சுமந் திரன் செல்கிறான். ”அனைவரும் தயாராக உள்ளனர் சிறிய தாயார் உன்னை அழைத்து வரும்படி என்னை அனுப்பினார்கள். என்கிறான். இராமன் உடனே விரை கிறான்.

இராமன் அரண்மனை செல்லும் வழியெல்லாம் மக்கள் வெள்ளம் ஆரவாரம் செய்

 

 

 

 

 

கிறது. வாழ்த்தொலிகள் முழங்குகின்றன, மன்னன் தன் வாயால் எதுவும் கூற மாட்டான் எனவே நானே

சொல்கிறேன் என்று தீர்மானம் செய்கிறாள் கைகேயி.

 

தாய் என நினைவான் முன்னே

கூற்று எனக் கைகேயி

 

வருகிறாள். தாயைக் கண்ட கன்று போல வந்த இராமன் அவளைப் பணிந்து நிற்கிறான். “உன் தந்தை உனக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஒன்றிருக்கிறது.

நீ சொல்லலாம் என்றால் நான் சொல்கிறேன் என்று பீடிகை போடுகிறாள்

 

எந்தையே ஏவ, நீரே உரை செய

இயைவது உண்டேல்

உய்ந்தனன் அடியேன், என்னின்

பிறந்தவர் உளரோ? வாழி

தந்தையும், தாயும் நீரே

தலை நின்றேன் பணிமின்

என்று விநயத்தோடு பேசுகிறான், தயக்கம் சிறிதுமில் லாமல்,

அரச கட்டளை

               ஆழிசூழ் உலகம் எல்லாம்

பரதனே ஆள நீ போய்த்

தாழிருஞ் சடைகள் தாங்கி

தாங்க அருந்தவம் மேற்கொண்டு

 

 

 

 

பூழி வெங்கானம் நண்ணி

புண்ணியத் துறைகள் ஆடி

ஏழிரண்டாண்டின் வா என்று

இயம்பினன் அரசன்

 

என்கிறாள். இங்கும் கைகேயியின் நாடகத் திறமை வெளிப்படுகிறது. பரதனுக்கே முழு அரசுரிமை என் பதை ஆழிசூழ் உலகம் எல்லாம் என்பதால் தெளிவு படுத்துகிறாள். இதில் பங்கு கிடையாது முழுவதும்

அவனுக்கே உரிமை. இராமன் வனம் சென்று தாழ் இருஞ்சடைகள் தாங்கி அருந்தவம் மேற்கொள்வது,

புண்ணியத் துறைகளில் நீராடுவது போன்ற நற் செயல்கள் செய்வது அவன் நற்பயன் பெறுவதற் காகவே,. தான் வரம் பெற்றதற்காக அல்ல, என்றும் சொல்கிறாள். என்ன கரிசனம்! எவ்வளவு நயம்! இது அரச கட்டளை அதனால் மீற முடியாதது என்பது குறிப்பு. நாகரிகமாகவும் அதே சமயம் அச்சுறுத்தலாக வும் அமைகிறது அவள் பேச்சு.

 

அன்றலர்ந்த தாமரை

                          ”ராமா! நாளை உனக்கு முடி சூட்டு விழா என்று தயரதன் அறிவித்த போது இராமன் ஒரேயடியாகப் பூரித்துப் போகவில்லை..

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதால் அதை காய்தலும் உவத்தலும் இன்றி ஏற்றுக் கொண்டான். இப்பொழுது அரசுரிமை பரதனுக்கு என்ற போது அவ

 

 

 

 

 

 

னுக்கு துளியும் வருத்தமில்லை. வண்டியில் பூட்டிய காளை அவிழ்த்து விடப் பட்டால் எவ்வளவு நிம்மதி அடையுமோ அது போல நிம்மதி அடைகிறான். எனவே

இப்பணி தலைமேற் கொண்டேன்

மின் ஒளிர் கானம் இன்றே

போகின்றேன் விடையும் கொண்டேன்

 

என்று டாடா காட்டிவிட்டு கிளம்பி விடுகிறான். முகத்

தில் சிறிதும் வாட்டமில்லை. அன்றலர்ந்த செந்தா மரை போலிருக்கிறது. தந்தையைப் பார்க்கவும் இல்லை. பார்க்கச் சென்றால் ஏதேனும் பிரச்சனை வரும் என்று எண்ணியிருப்பானோ? நேராகக் கோசலையிடம் செல்கிறான். எப்படி?

 

குழைக்கின்ற கவரி இன்றி

கொற்ற வெண்குடையும் இன்றி

இழைக்கின்ற விதி முன் செல்ல

தருமம் பின் இரங்கி ஏங்க

 

கோசலையிடம் வருகிறான். இதைக்கண்டு திடுக்கிட்ட

கோசலை,“நெடுமுடி புனைதற்கு இடையூறு உண்டோ?

என்று கேட்கிறாள். ராமனும் எம்பி பரதனே துங்க

மா மணி முடி சூடுகின்றான். என்று பொருத்தமாக பதில் சொல்கிறான். கோசலையும் விட்டுக் கொடுக் காமல் அதனால் என்ன? மரபு என்ற ஒன்று உண்டு.

 

 

 

 

 

என்றாலும் “நிறை குணத்தவன் பரதன் நின்னினும் நல்லவன்” என்று பரதனுக்கு நற்சான்று வழங்குகி றாள். தன் மகன் ஆளாவிட்டாலும் பரதன் அரசனாவது பற்றி அவளுக்குக் குறை ஒன்றும் இல்லை. நால்வரி டத்திலும் ஒரே மாதிரியான அன்பு காட்டுபவள் கோசலை.

இதன் பின்னரே இராமன் தான் 14 வருடங்கள் வன வாசம் செய்ய வேண்டும் என்று மன்னவன் கட்டளை பற்றிச் சொல்கிறான். இது வரை

சிறிதும் சலனமில்லாமலிருந்த கோசலை “வஞ்சமோ மகனே உன்னை அரசு தாங்கென்றதும்?” என்று கதறு கிறாள். நன்று நன்று மன்னன் கருணை! என்று சிரிக் கிறாள். அறம் எனக்கு இல்லையோ? என்று ஏங்கு கிறாள், விழுகிறாள் வயிற்றைப் பிசைகிறாள். புழுங் குகிறாள். இராமன் அவளைத் தேற்றுகிறான். பின் சுமித்திரையின் அரண்மனைக்குச் செல்கிறான். கோசலை மன்னனைப் பார்க்க கைகேயி அரண் மனைக்கு விரைகிறாள்.

                                            (தொடரும்)

Series Navigationதொடுவானம் 183. இடி மேல் இடி