கறுப்பினவெறுப்பு

கறுப்பின வெறுப்பு

ஆயிரம்

காலத்துப் போர் !

கறுப்பு  என்றால் வெறுப்பு

எனப் பொருள்.

கறுப்பும் வெறுப்பும் சமமில்லை !

வெள்ளை மாளிகை 

எரிந்துபோய்க்

கறுப்பு நிறம்

பூசி  உள்ளது ஒரு காலம்.

கறுப்புத் தளபதி ஆண்ட தடம்

உள்ளது.

ஞாலத்தில்  எழும்பிய 

தீராத

தீண்டாமைப் போர்.

கறுப்பும் வெளுப்பும் அங்கே.

சமமில்லை !

ஆப்ரகாம் லிங்கன் அடிமைகட்கு

விடுதலை பெற்றார்.

வெள்ளைக் காவலர்  ஆயினும்

கறுப்பரை

வேட்டை ஆடும் விலங்குகளாய்

பலி ஆடுகளாய்த்

தமக்கு

நாட்டில் நடமாடும் எளிய

துப்பாக்கிக் குறிகளாய், கண்முன்

இரையாக்கி வருகிறார்.

கறுப்பினக் குற்றவாளி ஒருவர்

நடுத் தெருவில்

கொல்லப் பட்டால்

பில்லியன் கணக்கில் மக்கள்

உலகிலே

துள்ளி எழுகிறார் !

கண்ணீர் பொழிகிறார் !

ஏன் ? ஏன் ? ஏன் ?

ஒற்றைக் கொலை நிகழ்ச்சி

திரண்டெழுப்பும்

மாபெரும் எதிர்ப்புக் காட்சி

உலகிலே !  

ஒற்றை

மரண நிகழ்ச்சி 

ஒருபெரும் எதிர்ப்புப் புரட்சியை

உண்டாக்கும்

மக்கள் மனத்திலே !

கறுப்பின மனிதனுக்கு இப்போது

விடுதலை தான் ! ஆயினும்

மூச்சு விட முடிய வில்லை அவனால் !

கறுப்பின மக்களின்

வானவில் ஐக்கியக் கொடி

வெள்ளை மாளிகைக் கம்பத்தில்\

பறக்கும் ஒருநாள் !

++++++++++++++++++++++

Series Navigationவெகுண்ட உள்ளங்கள் – 2இரு கவிதைகள்