கலப்பு

Spread the love

நாகபிரகாஷ்

காற்றுப்பிடிப்போடான நுறைப்பு
பெருக்கமாக கருதப்படும்
கோடைக்கால
நீர்பிடிப்புப் பகுதியில்
நாம் முட்டாள்

அவர்களின் மழைமேகங்களில்
சாத்தானும் குடியிருக்கக்கூடும்
தெய்வங்களுடன் சேர்ந்து

மறைவாக
நிறையச்சேமிக்கும்
பெருந்தனக்காரன் வீட்டில்
நீர் காவல் இலவசம்
ஊர் தந்தாகவேண்டியது

நண்பனின்
குடுகுடு பாட்டி
சாவதற்க்கு
கிடைத்த அதிர்ச்சி
கருநிற குடிநீர்
– நாகபிரகாஷ்.

Series Navigationமழையென்பது யாதென (2)இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி