கவலை தரும் தென்னை விவசாயம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 19 in the series 25 ஜனவரி 2015

kerala-coconut-treeமலேசியா, இந்தோனேசியாவை ப+ர்விகமாகக்கொண்ட தென்னை மரம் முதன் முதலில் இந்தியாவிற்கு கடல் வழியாக வந்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் இதனை கடல் யாத்திரை செய்யும் கொட்டை என்று அழைக்கிறார்கள். தேங்காயை தென்னம்பிள்ளை என்று அழைப்பார்கள். பிள்ளை என்றால் மலையாளத்தில் விருந்தாளி என்று பெயர். இதனால் மாப்பிள்ளை, தென்னம்பிள்ளை போன்ற வார்ததைகள் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களில் மாப்பிள்ளா முஸ்லிம் என்று ஒரு வகையினர் கேரளத்தில் உள்ளனர். அவர்கள் அரேபியாவிலிருந்து வந்து மதம் மாறியவர்கள் என்று கூறப்படுகிறது. திருமணம் ஆனவுடன் வீட்டிற்கு வரும் மணமகனை மாப்பிள்ளை என்று அழைப்பது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது.பெத்த பிள்ளை சோறு போடா விட்டாலும், நட்ட பிள்ளை சோறு போடும் என்ற பழமொழியும், தென்னை மரம் வைத்தவன் தின்னுட்டு சாவான், பனைமரம் வைத்தவன் பார்த்திட்டு சாவான் என்ற பழமொழியும் வெட்டிக்கெட்டது தென்னை, வெட்டாமல் கெட்டது முருங்கை என்ற பழமொழியும், நண்டு ஓட நடவு, வண்டி ஓட வாழை, தேர் ஓட தென்னை என மரம் வைப்பதைப்பற்றியும் பல பழமொழிகள் உண்டு.
தென்னை மரத்திற்கு பலவித பெயர்கள் உண்டு. கற்பக விருட்சம், தென்னை, தெங்கு, கற்பகத்தரு, லைப் மரம், கோகனெட் மரம் என்ற பல பெயர்கள் உண்டு.
இந்திய அளவில்; 25,24,370 ஏக்கர் பரப்பளவிலும், தமிழகத்தில் 2,73,000 ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டு வந்தது. தென்னை மரம் ப+மத்திய ரேகைக்கு 23 டிகிரிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
தேங்காயில் கண்களுக்கு மத்தியில் இருப்பது மூக்கு என்றும், பின்பக்கம் குடுமி என்றும் அழைப்பார்கள். மூக்கு, குடுமி ஆகியவைகளை உரித்து உரிமட்டை எடுப்பார்கள். மூக்குவைத்து உரிமட்டையை ப+மாலை போல கோர்த்து வைப்பது கேரளாவில் வழக்கம். அப்படி ப+மாலை போல கொண்டு வந்துதான் தமிழகத்திற்கு தேங்காய் பரவியது.
தேங்காயை இரண்டாக உடைத்து கண்பாகம் கொண்டபாகத்தை பெண்முறி என்றும் மறுபகுதி ஆண் முறி எனவும் அழைப்பர். பெண்முறி பெரிதாக இருந்தால் பெண்கள் ஆதிக்கம் குடும்பத்தில் நிகழும் என்றும் ஆண்முறி பெரிதாக இருந்தால் ஆண்கள் ஆதிக்கம் அதிகம் என கிராமப்புறங்களில் கூறுவதுண்டு. தேங்காய் உடைக்கும்போது சிதறினால் அபசகுணம் என்றும் அழுகி இருந்தால் குடும்பத்தில் ஏதாவது ஏற்படும் என்பது நம்பிவருகிறார்கள்.
தென்னை மரத்தின்; மட்டைகளின் இருவிளிம்புகளையும இணைத்து மரத்தோடு பலமாக ஒட்டிக் கொண்டு இருக்கும். சவ்வு போன்ற பாகம் சல்லடையாகவும், வலைபோன்று பின்னி பிணைந்திருக்கும். இதனை பன்னாடை என்று அழைப்பார்கள்.
தென்னை மரத்தில் வரக்கூடிய அனைத்துப்பொருட்களும் பயன்தருபவை. காப்பி, தேநீர் அருந்தும் குவளைகளாகவும், அடுப்பு பற்ற வைக்க, அகப்பையாக என பலவிதத்தில் பயன்படுகிறது. தேங்காய் நாரில் பலவித கலைவண்ணப்பொருட்களும், தேங்காய் மட்டைகளில் பலவண்ணங்கள் ப+சி அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இன்றும் சில கிராமங்களில் தீண்டாமை புரையோடி உள்ளது. தீண்டாமை கோரவடிவம் உள்ள கிராமங்களில் தீண்டத்தகாதவர்கள் என எண்ணுபவர்களுக்கு தேங்காய் சிரட்டையில் தேநீர் கொடுப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள். இன்றும் பல கிராமங்களில் தேங்காய் சிரட்டைகளை கடை முன்னால் வைத்துள்ளார்கள். தென்னை மரத்தில் கிடுகு, விளக்குமார், பந்தல்போன்றவை அமைக்கவும் பயன்படுகி;றது.
ஆடிமாதத்திலும், தைமாதத்திலும் தேங்காய் வெட்டு நடைபெறும். இதனை பருவ வெட்டு என அழைப்பார்கள். பருவத்தில் தவறிய தேங்காயை கோடை கால தேங்காய் என அழைப்பார்கள். தேங்காயில் ஐதீகமும் உள்ளது. தேங்காயில் சிலவற்றில் கொம்பு வரும். அந்தக்கொம்பு தேங்காயை இந்துக்களாக இருந்தால் கோயிலுக்கும், முஸ்லிம்களாக இருந்தால் நாகூர், ஏர்வாடி போன்ற தர்காக்களும், கிறிஸ்தவர்களாக இருந்தால் வேளாங்கண்ணிக்கும் நேர்ச்சை செய்வது வாடிக்கையாக வைத்துள்ளனர். கன்னியாகுமரிப்பகுதியில் பகவதியம்மன் மண்டைக்காடு கோயிலிலும், தேனி வடபுதுப்பட்டி, கரூர் பகுதியில் தேங்காயை தலையில் உடைத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவருகிறார்கள் பக்தர்கள்.
1975,1976 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி அகல ரயில்பாதை அமைக்கும் பணியில் ஏராளமான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டன. இதனால் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் கேரளமாநிலத்தில் திருவனந்தபுரத்தில் ஏராளமான தென்னை மரங்கள் தங்களுடைய வாழ்வை முடித்துக்கொண்டன.
ஒரு மனிதனுக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீரும், ஆட்டுக்கு 5 லிட்டர் தண்ணீரும், பசுவுக்கு பத்து லிட்டர் தண்ணீரும், தென்னைக்கு 55 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது என்கிறார்கள்; தென்னை ஆராய்ச்சியாளர்கள்.
கோடை காலத்தில் காய்ந்த வேர்கள் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் புத்துயிர் பெற்று மார்கழி, தை மாதங்களில் நல்ல பலனை கொடுக்கும். ஆடி, ஆவணி மாதங்களிலல் தேங்காய் அதிகமாக கிடைக்கும். இதற்கு ஆடிவெட்டு  என்று அழைப்பார்கள். இவ்வாறு 6 மாதத்தில் வெட்டப்படும் தேங்காய் இளநீராகவும், 11,12 மாதங்களில் நெற்றாகவும், 12 மாதத்தில முற்றிய நெற்றாகவும் காணப்படும்.
இன்;று மலையாளத்தில் தெங்கு என தேங்காயை அழைப்பர். குமரிமாவட்டம் திருவிதாங்கூரில் இருந்தபோது தெங்கநாடு (இன்றைய தேங்காய்பட்டினம்) என்ற பெயரில் ஒரு நாடு இருந்தது. ஆனால் தென்னை என்ற பெயரில் கேரளத்தில் ஊர்கள் இல்லை. தெங்கு என்று முடியும் ஊர் அஞ்சு தெங்கு என்று ஆழப்புழையில் உண்டு.
இவ்வளவு பெருமை வாய்ந்த தென்னை மரம் கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளின் வாழ்வையே புரட்டி போட்டு வருகிறது. விளைவு கேரள வாடல்நோய், வேர்அழுகல்நோய், அடிக்கடி நிகழும் ச+றாவளிக்காற்று, நிலத்தடி நீர் மட்டம் பற்றாக்குறை இவற்றால் தென்னை விவசாயத்தின் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.
தேனி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் வாடல் நோய் தாக்கி தென்னை விவசாயம் அழிந்து வருகிறது. பிள்ளையை பெத்தா கண்ணீரு. தென்னையை வளர்த்தா இளநீர் என்ற பழமொழியும் பனம் மரம் வைத்தவன் பார்த்திட்டு சாவான். தென்னை மரம் வைத்தவன் திண்ணுட்டு சாவான் என்ற பழமொழி கிராமங்களில் அடிக்கடி கேட்க கூடிய பழமொழியாகும். ஆனால் இன்று தென்னையை வளர்த்தாலே கண்ணீர்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, அ.வாடிப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னை விவசாயம் தான் பிரதான விவசாயம்; ஆகும். இங்கு விளையும் தென்னை காய்கள் மும்பை, வெள்ளகோவில், ஈரோடு மற்றும் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இ;து தவிர தென்னையில் இருந்து கிடைக்கும் கிடுகுகள், துடைப்பான், தென்னை நார், தென்னை மட்டை என தென்னை மரத்தில் எந்தப்பொருளும் பணம் காய்ச்சி மரம் தான். இதனால் தேவதானப்பட்டி பகுதியில் தென்னை விவசாயம் முதலிடத்தை பிடித்தது. ஏரியல் விய+வில் பார்த்தால் தென்னை மரங்கள் நிறைந்த சோலைகளாகத்தான் காணப்படும். தேங்காய் இல்லையென்றால் இல்லத்தரசிகள் குழம்பு வைக்கமாட்டார்கள். காலை முதல் இரவு வரை தென்னை மனிதனோடு ஒட்டி வாழுகின்ற அரிய பொருளாகும். தென்னை மரம் வைத்தவர்கள் 40 நாட்களுக்கு ஒருமுறை வருமானத்தை ஈட்டினார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் விலைஏற்றம் ஆகாத பொருள் தேங்காய் ஒன்று தான். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விற்பனை ஆன தேங்காய் 3ரூபாய் என்றால் இன்றும் அதே 3ரூபாய்க்குத்தான் விற்பனை ஆகிறது. ஆனால் தேங்காய் இறக்குபவர்களின் கூலி, உரம் விலை உயர்வு, கடும் மின்தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, நிர்ணயம் இல்லாத விலை, இடைத்தரகர்கள் ஆதிக்கம் என  பலவித காரணிகளால் தென்னை விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது.  இவை தவிர வாடல் நோய், கேரள வாடல்நோய், குருத்து நோய் தாக்குதல் என பலவித நோய்களும் தாக்கி தென்னை மரங்கள் கருகுதல், குருத்துகள் ஒடிந்து விழுதல், மரத்தின் வேர்கள் ;காய்ந்து தென்னை சாய்ந்து விழுதல் என தென்னை மரத்திற்கு அடுத்து அடுத்து சோதனைகள் தான். தென்னை மரத்தை காப்பாற்ற, நோய்களில் இருந்து எதிர்கொள்ள தென்னை நல வாரியமும், தோட்டக்கலைத்துறையினரும் எந்த வித நடவடிக்கையும் ;எடுக்கவில்லை. இந்நிலையில் வனவிலங்குகளான குரங்குகள், அணில்கள், பறவைகள் தங்களுடைய பங்கிற்கு தென்னை விவசாயத்தை அழித்து வருகிறது. மாறிவரும் காலநிலைகளினால் தென்னை மரத்திற்கு தண்ணீர் இல்லாமல் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தென்னந்தோப்புகளை அழித்துவிட்டு வீட்டுமனைகளாக பிளாட்போட்டு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் தென்னை வாரியமும், கேரள அரசும் தென்னை காப்பாற்ற பலவித நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகிறது. மேலும் அங்கு வாடல் நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தென்னை மரங்கள் காப்பாற்றப்படுகிறது. இதன் சம்பந்தமாக விவசாயிகள்  கூறுகையில், ஆண்டுக்கு ஆண்டு நஸ்டம் ஏற்படுத்துகிற ஒரே தொழில் தென்னை மரம் தான். மற்ற விவசாயம் இந்த ஆண்டு இல்லையென்றால் அடுத்த ஆண்டு கைகொடுக்கும். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக  விவசாயிகளின் குரல்வளையை நெறிக்கின்ற தொழிலாக தென்னை விவசாயம் மாறிவிட்டது. அரசு சார்பில் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல லட்சம் வருமானம் தரக்கூடிய தென்னை மரத்தை வெட்ட வெறும்  250 ரூபாய்தான் கொடுக்கப்பட்டது. தற்போது அதிலும் பலவித குறைபாடுகள், அதிகாரிகளே அந்தப் பணத்தை ஏதாவது ஒரு பெயரில் கையெழுத்திட்டு எடுத்துக்கொள்கிறார்கள்.  அரசு தேங்காய்களுக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும். அரசு கூட்டுறவுத்துறை மூலம் தேங்காய்களை கொள்முதல்  செய்யவேண்டும். மேலும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கவேண்டும். இல்லையெனில் இனிமேல் தென்னை மரத்தை அழித்து விட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டியது தான் என்றார்.  வேளாண்மைத்துறையில் பட்டப்படிப்பில் பி.எஸ்.சி.அக்ரி என்ற பிரிவில் தென்னை சம்பந்தப்பட்ட படிப்பு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
தோட்டக்கலைத்துறையினர் அழிந்து வரும் தென்னை விவசாயத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் தென்னை மரத்தையும், தேங்காய்களையும் வரலாற்று பாடப்புத்தகத்தில் மட்டும் தான் காண இயலும்.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602.
தேனி மாவட்டம்
செல்:9715-795795

Series Navigationசீரங்க நாயகியார் ஊசல்“ஏக்கம் நுாறு” “கனிவிருத்தம்” கவிதை நுால்களை கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *