கவிதைகள்

Spread the love

நிழல்

                         

என்னைப்போலவேஅவனும்

கவிதைஎழுதுகிறான்

கட்டுரைவரைகிறான்

மேடையில்பேசுகிறான்

அவனைப்பார்த்தால்

நான்பொறாமைப்படுவதுஉண்மையே

என்னைப்போலவே

கோபப்படுகிறான்லே

லேசாகச்சிரிக்கிறான்

உறவுகளைநேசிக்கிறான்

நட்புகளைநெருங்குகிறான்

அவனைப்பார்த்தால்

நான்பொறாமைப்படுவதுஉண்மையே

அவனும்என்னைப்போலவே

மாலதியைநேசிக்கிறான்

நாடிவந்தமல்லிகாவை

வெறுத்தொதுக்கினான்

தேடிச்சென்று

புகழடையவிரும்பாதவனை

நீயார்எனக்கேட்டேன்

நான்தான்உன்நிழல்என்றான்

============================================================================

எழுதுதல்

                               

எழுதவேண்டும்

ஆமாம்நிறுத்தாமல்

எழுதிக்கொண்டே

இருக்கவேண்டும்.

இல்லையேல்உன்னை

மறந்துவிடுவார்கள்

அதுமட்டுமன்றுஉன்னை

மிதித்துஅடித்துப்

போட்டுவிடுவார்கள்

நீஇருந்தஇடமே

தெரியாதபடிக்கு

சுவடுகளைஎல்லாம்

சுனாமிவந்ததுபோல

அழித்துவிடுவார்கள்

ஆகவே

ஏதாவதுஎழுதிக்கொண்டே

இருக்கவேண்டும்

புரியவேண்டும்என்பதில்லை

புரிந்ததுபோல்எழுதவேண்டும்

புரியாததுபோலவும்

எழுதவேண்டும்.

எப்படியோ

எழுதிக்கொண்டே

இருக்கவேண்டும்

உன்னிடத்தைப்பிடிக்க

அதோஒருவன்வருகிறான்

அவன்வந்துஉன்

கையைமுறிப்பதற்குள்

எழுது     

ஏதாவதுஎழுது.

Series Navigationதேடல் !மறு பிறப்பு