கவிதைகள்

Spread the love

ரோகிணி

பெண்மையின் ஆதங்கம்

____________________________
எப்போதும் விடை
தெரியாத கேள்வி போல்
ஓடிக்கொண்டிருக்கும்
இந்த வாழ்க்கையில்
இரவுப் பொழுதின்
ஆதிக்கம் உனதாகவே
இருக்கிறது… 
 
பகல் பொழுதின்
ஆதிக்கம் எனதாகவே
இருக்கிறது.. 
இரவும் பகலும்
சேராதொரு பொழுதைப்போல
நீயும் நானும் சேர்ந்தொரு
ஆதிக்கம் படைக்க
இயலாது என்பதாகவே
இருந்துவிட்டு போகட்டும்! 
 
______________________________
 
சூரியக் குழந்தை
____________________
மலையில் கம்பீரமாக
உதிக்கும் சூரியன்
வான மைதானத்தில்
தவழ்ந்து புரண்டு
விளையாடி, 
இரவு நிலவு வருமுன்
கடலுக்குள் ஓடிஒளிகிறது
பூச்சாண்டிக்கு பயப்படும்
சிறுகுழந்தையைப்போல்
____________________________
 
கடைசி நிலாக்கீற்று
_______________________
தோட்டத்தில் வைத்திருந்த
தண்ணீர் அண்டாவில்
தெரிந்த நிலாக்கீற்று
சிறிது நேரத்தில் என்
பேத்தியின் வயிற்றுக்குள்
போனது.. 
வயிற்றுக்குள் போன
நிலாக்கீற்று மறுநாள்
வானத்திலும் உதிக்கவில்லை!
__________________________________

 

 

Series Navigationஒளிப்படங்களும் நாமும்இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?