கவிதைக்கப்பால்

நான்குலைக்குகளை குறைந்தபட்சம் நாற்பதாகவேனும்

அதிகரிக்க
அதிகபட்சம் 400க்கும் அதிகமாக்க –
நாலாபக்கங்களிலிருந்தும் கைத்தட்டல்களைக்

கிளம்பவைக்க –
நாக்கு மேல பல்லு போட்டு
நாலையும் பற்றி நன்கு தாளித்து
நான்கைந்து திறனாய்வுப் பார்வைகளைத்
தர வல்லவர் என்று ‘ஃபிலிம்’ காட்டுவதற்காய்,
நானோ நீவிரோ – யார் எழுதினாலும்
அது கவிதைபோன்றதே யன்றி
கவிதை யன்று.

Series Navigationகவிதையின் காலம்கவிதையின் வாழ்வு