கவிதைப் பிரவேசம் !

This entry is part 15 of 19 in the series 8 ஏப்ரல் 2018

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

அம்மா மடியில் தூக்கம்
தோள் தொட்ட குழந்தையின்
பிஞ்சு விரல்களும்
குறுகுறு பார்வையும்…

மலரில்
கவிதைகளே இதழ்களாய் …
பழுத்த பழத்தின்
மஞ்சள் புன்னகை
நண்பர்களின்
சுவாரஸ்யமான பேச்சு

வெளிர் நிறத்துத்
துளிர் இலைகளில்
மெல்லிய நரம்போட்டம் …

செங்குழம்பென
செவ்வானத்தின்
ஆழ்ந்த கோபம்
சிட்டுக்குருவியின்
படபடப்பிலும்
புரியா மொழியிலும் என
என் கவிதைப் பிரவேசங்கள்
எத்தனை முறைதான்
என்னை மகிழ்வூட்டின ?
ஓ ! கவிதைக்குள் வாழ்க்கை
மிகவும் ரசமானது !

Series Navigationமீண்டும்… மீண்டும்…“ஒரு” பிரம்மாண்டம்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Comments

  1. Avatar
    எஸ்.அற்புதராஜ் says:

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதை ‘கவிதைப் பிரவேசம்’ கவிதையில் இளமையில் அம்மாவின் ஸ்பரிசமும் முதுமையில் கவிதானுபவமும் ஒருசேரத் த்வனிக்கின்றன. நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *