கவிதை

Spread the love

என்
தாய்நிலத்தைக்
காணவில்லை என்கிறேன்.
கிணற்றைக்
காணவேயில்லை என்கிறாய்.
சிறுகச் சிறுகச் சேகரித்து
பூட்டன் வாங்கிய
நிலத்தை
கொஞ்சம் கொஞ்சமாக
எல்லைகள்
அயலவனால்
சுருங்கிப்போக,
கிடைப்பதே போதுமென
நினைக்கையில்
சப்பாத்துக்கால்கள்
தங்களது என
உயிலுடன் வந்து நின்றனர்..
நான் என் செய்வேன்..
இப்போது சொல்..
நிலமா? கிணறா??
முல்லை அமுதன்
16/09/2019

Series Navigationமுல்லை