காலமும் தூரமும்

 

 

— ரமணி

 

யார் சொல்லியும்

எப்படிச் சொல்லியும்

சண்டையின்போது

மேல்விழுந்த வார்த்தைகள்

செய்த காயத்தை

ஆற்றிக்கொள்ளவே முடியவில்லை!

 

 

புழுதி படிந்துகொண்டிருக்கும்

அந்த நாளின் பாரம்

இறக்கப்படாமலேயே

உறைந்து கிடக்கிறது!

 

பார்வையை விட்டகல

புலம் பெயர்ந்த பின்னும்

நழுவிய நாட்களோடு

காயத்தின் வலியும்

செய்தவன் நினைவும்

கரைந்து போய்விடவில்லை.

 

நேர்ந்துபோன உறவுகளை

காலம் சேர்க்கவும் இல்லை

தூரம் பிரிக்கவும் இல்லை

 

—-  ரமணி

Series Navigationதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சிநல்லதோர் வீணை..!