குட்டி இளவரசி

மஞ்சுளா 

பகலின் பாதியை 

மூடி மறைத்து 

குட்டி மழையை 

கொண்டு வந்தன 

மேகங்கள் 

வெடித்த நிலப்பரப்பில் 

தன் தலை நுழைத்து 

விம்முகின்றன 

மழைத் துளிகள் 

நெகிழ்ந்தும்… குழைந்தும் 

மண் 

மற்றொரு நாளில் பிரசவித்தது 

தன் சிசு ஒன்றை 

இதுன்னா….? 

அதன் பெயர் எதுவென்று தன் குளிர் மொழியில் கேட்கிறாள் 

தளிர் நடை பயிலும் 

குட்டி இளவரசி 

                     –  மஞ்சுளா 

Series Navigation‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்மானுடம் வென்றதம்மா