Posted in

குரங்காட்டியும் குரங்கும்

This entry is part 1 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

 

கோலெடுத்தான்

குரங்காட்டி

ஆடியது குரங்கு

கர்ணம் போட்டது

காவடி எடுத்தது

தங்கச்சி பொம்மையைத்

தாலாட்டியது

இரண்டு கால்களால் நின்று

இசைக்கு ஆடியது

கைகளை ஏந்தி

காசு கேட்டது

குடும்பம் நடந்தது

குரங்காட்டிக்கு

ஒரு நாள்

மனம் மாறினான்

குரங்காட்டி

ஒரு குரங்கால்

நம் குடும்பம் நடப்பதா?

வெட்கம்

குரங்கை காட்டிலே விட்டு

வீடு ஏகினான்

பாவம் குரங்கு

அதற்கு சுதந்திரம்

புரியவில்லை

செடிகளிடமும்

சில்லரை மிருகங்களிடமும்

காசு கேட்டுத்

திரிகிறது.

அமீதாம்மாள்

Series Navigationஇசை – தமிழ் மரபு – 3

One thought on “குரங்காட்டியும் குரங்கும்

  1. இன்றைக்கு கழுதைகளுக்குக் கூட தாள்களைத் தின்னத் தெரியவில்லை. சரணாலயங்களின் உள்ளே வாகனங்களில் செல்லும்போது குரங்குகள் வந்து யாரேனும் ஏதாவது போட மாட்டார்கள என்று ஏங்கி நிற்பதைப் பார்த்திருக்கிறேன். பெண்ணாடம் மற்றும் மாத்தூர் ரயில் நிலையங்களில் ரயில் வந்து நின்றவுடன் பயணிகள் ஏதேனும் போடுவார்களா என்றே ஏங்கும். எந்த ஓர் உயிரினமும் பழக்கப்பட்ட சூழலை விடவே மாட்டாது

Leave a Reply to valavaduraiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *