குருட்ஷேத்திரம் மகாபாரத  தொடர் தொகுப்பாக அமேசானில்

Spread the love

 

பாரதத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் வழியாக வியாசர் அறத்தை முன்நிறுத்துகிறார். பாரதத்தில் மகாபெரியவரான பாட்டனார் பீஷ்மர் கதாபாத்திரம் வியாசர் மனதில் எப்படி உதித்திருக்கும். திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனன் மீது வைத்திருந்த பாசத்தால் அகக்கண்களும் குருடானவன் என்கிறார். நீதியை துரியோதனனுக்கு எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ள திருதராஷ்டிரன் சகுனி காய் உருட்டுகையில் என் மகன் ஜெயித்தானா ஜெயித்தானா என்று பேராவல் கொண்டு கேட்கிறான். பாஞ்சாலி அவையில் துகிலுரியப்பட்டபோது பீஷ்மரின் பேச்சு அறத்தை முன்னிறுத்துவதாக இல்லை. துரியோதனாதியர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். தருமர் தன்னையே பணயம் வைத்து இழந்த பிறகு என்னைப் பணயம் வைப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது திரெளபதியின் இந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே படுகிறது. பீஷ்மர் எழுந்து நின்று பேசுகிறார் தருமன் அடிமைப்பட்ட பிறகு தருமனின் மனைவியும் அடிமையாகிவிடுகிறாள் என்ன ஒரு நீதி பார்த்தீர்களா? அவருடைய அன்றைய பேச்சில் சாணக்யத்தனமும் இல்லை சத்தியமும் தென்படவில்லை. பீஷ்மர் திரெளபதியின் மீது இரக்கம் கொள்ளாததற்கு அவர் பெண்ணினத்தையே வெறுத்தது ஒரு காரணமாக இருக்கலாம். திண்ணையில் வெளிவந்த 24 கட்டுரைகள் அடங்கிய குருட்ஷேத்திரம் மகாபாரத  தொடர் தொகுப்பாக அமேசானில் கிடைக்கிறது வாங்குவதற்கு இங்கே சொடுக்கவும் –

ப.மதியழகன்

Series Navigationநிழல் பற்றிய சில குறிப்புகள்ஆண் வாரிசு