குளியல்

Spread the love

மதுராந்தகன்

உயர்ந்த மலைச் சிகரங்கள்

 தழுவிச் செல்லும் வெண்மேகங்கள்

கிளைபரப்பி விரித்து நிற்கும் மரங்கள்

சில்வண்டுகளின் இரைச்சல்

 காட்டுப் பூக்களின் வாசனை

 திசை எங்கும்

சலசலத்தோடும் ஆறு

ஆம். கல்லாறு

 நண்பரும் நானும் ஆதிமனிதர்கள் ஆகி

 உடைகளின்றி நீரில் இறங்கினோம்

கதை கவிதை திரைப்படம் என்று

 பலவாறு பேசிக் கொண்டே நீராடினோம்

 நேரம் போனது தெரியாமல்.

 திடீரென்று இரண்டு  பேர் ஓடிக்கொண்டிருந்தார்கள்

 விவரம் கேட்டதற்கு

யானை வருகிறது என்று சொல்லியவாறு ஓடினார்கள்

 நண்பனும் நானும் அச்சத்தோடு

நீரை விட்டு வெளியேறி

 துணிகளை எடுத்துக்கொண்டு ஓடினோம்

எங்கள் நிலை அறியாமல்

 ஒரு மேட்டிற்கு வந்து

 நின்ற பிறகுதான் எங்கள் நிலை புரிந்தது

 வெட்கப் பட்டு ஆடைகளை

அணிந்தவாறே  சிரித்துக்கொண்டே

அகத்தியர் ஞான குடில்

என்ற நண்பரின் ஆசிரமம் நோக்கி நடந்தோம்

Series Navigation‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்சொல்லத்தோன்றும் சில…..