ஜே கோபிகிருஷ்ணன்
கேரளாவில் பிறந்து கேரளாவிலேயே கடந்த 37வருடங்களாக வாழ்ந்து வரும் எனக்கு, கேரளாவை யாரேனும் “கடவுளின் சொந்த நாடு” என்று சொன்னால், சிரிக்கத்தான் தோன்றுகிறது. இப்பத்த்தான் விளம்பர வார்த்தைகள் நம் மனதுக்குள் ஊடுருவி, ஆக்கிரமித்து, ஆள ஆரம்பித்துவிடுகின்றன. இந்த விளம்பர வாசகம், கேரளா சுற்றுலாத்துறையின் விளம்பர வாசகமாக 15 வருடங்களுக்கு முன்னால் உபயோகப்படுத்தப்பட்டது. இதனை உருவாக்கியவர் கேரளா கேடரைச் சேர்ந்த உத்தரபிரதேச ஐஏஎஸ் ஆபீஸர். அவரது பெயர் அமிதாப்காந்த்.
மலையாளிகளான நாங்கள், எங்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு பெருமையையும், (அது நியாயமானதா இல்லையா என்று கருதாமல்) அள்ளிக்கொள்வதற்கு தயாராகவே இருக்கிறோம். ஆனால், உன்னிப்பாக கவனிப்பவர்கள் விமர்சனமாக சொல்வதை நினைவில் வைத்துகொள்வதுகூட இல்லை என்பது அறிந்த விஷயம். 120 வருடங்களுக்கு முன்னால், சுவாமி விவேகானந்தர், திருவாங்கூர் சமஸ்தானத்தின் வழியே செல்லும்போது, இங்கே இருந்த ஜாதி ஏற்றத்தாழ்வை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். சுயமாக தங்களுக்குத்தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட “மேல்ஜாதிகள்” பிற்பட்ட ஜாதிகள் மீது நடத்தும் கொடுமையை கண்டு கேரளாவுக்கு ஒரு அடைமொழி கொடுத்தார். அது எப்படியோ கேரளாவின் மீது ஒட்டிக்கொண்டது. அது “பைத்தியக்கார விடுதி” என்பது.
சுவாமி விவேகானந்தரின் விமர்சனத்தாலோ அல்லவோ, மாறுதலுக்கான ஒரு உந்துவேகம் ஆரம்பித்தது. சமூக தளத்தில் தொடர்ந்து பல மாறுதல்கள் ஆரம்பித்தன. 21ஆம் நூற்றாண்டின் பத்தாண்டுகளுக்கு பின்னர் சாதியம் இன்னும் ஒரு வலிமையான அமைப்பாக இருந்தாலும், சமூகதளத்தில் முன்காலத்தை விட மட்டுப்பட்டே இருக்கிறது. இடதுசாரிகளும், மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்டுகளும், கூறும் “முன்னேற்றம்” தொழிலாளர் சங்கங்கள் மூலமாகவும், 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய சமூக சீர்திருத்த இயக்கங்களாலும் உருவம் பெற்றது.
இருப்பினும், அரசியல் சூழ்நிலை, ஜனநாயகம் என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தில் உருவம் கொள்ளவே இல்லை. சாதி அரசியல், மேற்கு வங்காளத்துக்கு ஈடான வன்முறை அரசியல் ஆகியவை மலையாளிகள் தங்களுக்குத்தாங்களே கூறிகொள்ளும் முற்போக்கு மக்கள் என்ற அடைமொழியை கேலி செய்வதாகவே உள்ளன. இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இந்தியாவில் கொண்டுவந்த “புரட்சி” என்பது அந்த வார்த்தையின் மிக அவலமான பொருளிலேயே ஊனப்பட்டது. அவர்களை பொருத்தமட்டில், “மாற்றம்” என்பது சமூகத்தின் உருவத்தையும் ஆன்மாவையும் முழுவதுமாக அழிப்பதும், அதற்கு ஈடாக எதையுமே வைக்காமல் இருப்பதும்தான்.

சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.எம். மணி அவர்களது பேச்சு இந்த சீரழிவின் உச்சம். கம்யூனிஸ்டு அரசியலால் உருவான இந்த பிரகிருதி, டிவி கேமராக்கள் முன்னிலையில் அவரது கட்சி தொடர்ந்து அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டி வந்திருக்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை பற்றி ஒருமுறைகூட சிந்திக்கவில்லை. மலையாளின் பொது மனத்தின் ஒரு மூலையில் பேய்க்குணம் இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது.
கம்யூனிஸ்ட் இயக்கம் கேரளாவில் ஒரு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1920களில் ஆரம்பித்த இந்த இயக்கம், தொழிலாளர் சங்கங்கள் மூலமாகவும், சாதி சங்கங்கள் மூலமாகவும் சீர்திருத்தங்கள் மூலமாகவும் தன்னை வளர்த்துகொண்டது. கம்யூனிஸ்டுகளின் கோட்டையான வட கேரளாவில் அரசியல் விழிப்புணர்வு மெல்ல மெல்ல வெவ்வேறு வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பதை யாரும் கவனிக்கவில்லை. சாதி அரசியலும், மத அரசியலும், மத அடிப்படைவாதமும் கேரளாவின் மைய அரசியல் நிலையை பாதிக்கவில்லை என்றாலும், கேரளாவின் புதியதாக தோன்றியுள்ள ஜனநாயகத்தை அதை விட மோசமான பேய் தின்றுகொண்டிருக்கிறது. அது ஸ்டாலினிஸம்.
1970களிலிருந்து, கேரளாவில் கொள்கைக்காக சாகும் மக்களை பார்ப்பது சாதாரணமாகத்தான் இருந்துவருகிறது. 1970களின் மத்தியில் தோன்றிய தலைமுறையில் ஸ்டாலினிஸமும் அதன் மாற்றாக வந்த மாவோயிஸமும், பேஷனாக ஆகியிருந்தன. இந்த அகோரமான கொள்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவே இல்லாமல், மலையாளிகள் பெங்காளிகளின் கண்ணாடி பிம்பங்களாக ஆகியிருந்தார்கள். இவர்கள் இருவருமே தாங்கள் புரிந்துகொள்ளாத ஒன்றை காப்பியடித்துகொண்டு , அதன் விளைவாக தங்கள் சொந்த கலாச்சாரத்தை உதறியவர்களாக இருந்தார்கள்.
1949இல் கம்யூனிஸ்டு கட்சி கொண்டுவந்த “கல்கத்தா தீஸிஸ் (Calcutta thesis) வர்க்க எதிரிகளை (அரசியல் எதிரிகள் என்று படித்துகொள்ளவேண்டும்) தீர்த்துக்கட்டுவதை முக்கியமாக கொண்டது. அது வட கேரளாவில் சிபிஎம் வகுப்புகளில் புல்லரிக்கக்கூடிய கொள்கையாக எடுத்துகொள்ளப்பட்டது. கேரளாவில் கம்யூனிஸம் பிறந்த கன்னூர் மாவட்டத்தின் தலசேரியை சேர்ந்தவனான நான், இதற்கு சாட்சி அளிக்க முடியும். இந்த சொல்லாடலை எடுத்துகொண்ட தலைவர்கள் ரத்தவெறியில் திளைத்தார்கள். ஒவ்வொரு குற்றத்தையும் கட்சியின் பெயரால் நியாயப்படுத்தினார்கள்.
1970களில் சிபிஎம்மின் குணம் மாறியது. “தீவிரவாத புரட்சி இயக்கங்கள்”க்கு எதிராக கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தது. சிபிஎம் தலைவர்கள் தங்களது கூட்டங்கள் திடீரென்று உப்புச்சப்பு இல்லாத கூட்டங்களாக ஆயின என்று நினைவு கூருவார்கள். நகைச்சுவையும், கிண்டலும், உள்குழு கூட்டத்திலிருந்து காணாமல் போயின. எவரிடமும் சிரித்த முகமே இல்லாமல் போனது. ஆபத்தான தீவிரமான நிழல் உள்குழு கூட்டத்தின் மீது படிந்தது. சிரிக்கும் தலைவர்கள் அபூர்வமானவர்களாக ஆனார்கள்.
சிபிஎமை விட்டு வெளியேறிய தலைவர் டி பி சந்திரசேகரனை கொலை செய்தது எந்த அளவுக்கு அழுகியிருக்கிறது என்பதை காட்டியிருக்கிறது. ஆகவே, மணி அதனை விளக்கியது யாருக்கும் ஆச்சரியமாக இல்லை. 1980களில் அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டியதை சுட்டிக்காட்டி, ’சிபிஎம்முக்கு துரோகம் செய்த’ சந்திரசேகரனை கொன்றதை நியாயப்படுத்தியிருக்கிறார்.
காங்கிரஸ் நடத்தும் யுடிஎஃப் அரசாங்கம் பழைய கொலைவழக்குகளை மீண்டும் திறந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக சொல்லியிருப்பதன் மூலம் தனக்கு தைரியம் இருக்கிறது என்று காட்டியிருக்கிறது. இந்த வழக்குகளை அதன் நியாயமான முடிவுக்கு எடுத்துசெல்லுமா காங்கிரஸ் அரசாங்கம் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. இந்த சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் இந்த ஆர்வமும் மறைந்துவிடும் என்றே பலரும் கருதுகிறார்கள்.
மேற்குவங்காளத்தில் 20000 பேர்கள் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டார்கள் என்று மத்திய அரசாங்கம் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டது கம்யூனிஸ்டுகள் ஆட்சியிலிருந்த முப்பதாண்டு காலத்தில். கேரளாவில் 200 பேர்கள் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கன்னூரில் சிபிஎம்முக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் முடிவே இல்லாமல் நடந்து வரும் பலிக்கு பலி கொலைகளால் பெரும்பான்மையான இந்த கொலைகளுக்கு காரணம். பல நேரங்களில் கொலை செய்பவர்களும், கொலையாகுபவர்களும் காங்கிரஸையோ அல்லது முஸ்லீம் லீகையோ சேர்ந்தவர்கள். ஆனால், சிபிஎம் எப்போதுமே ஒரு தரப்பில் இருக்கிறது. 13 வருடங்களாக கேரளாவில் செய்திப்பத்திரிக்கை நிருபராக இருக்கும் நான். மணி பேசியது போன்ற பேச்சுக்களை பல மூத்த சிபிஎம் தலைவர்கள் பேசி கேட்டிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக, எப்படியோ மணி பேசியது வெளிவந்து சட்டத்தை இந்த திசை நோக்கி நகர்த்தியிருக்கிறது. மிகக்குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, எப்படி படித்த திறமையான, மற்றபடி உணர்வுப்பூர்வமான மனிதர்கள் கொலைகாரர்களாக மாறிவிடுகிறார்கள் என்று அடிக்கடி ஆச்சரியப்பட்டிருக்கிறேன். கேரளாவிலிருந்து விலகி, வட இந்திய சூழ்நிலையில் எனது அனுபவத்தின் மூலம், மலையாளி மனத்தின் அடிப்படை குறைபாட்டை என் கண்கள் பார்க்கும்படி வைத்திருக்கிறது.
அவன் கட்சி சொல்லுவதற்கு தனது உடலையும் ஆன்மாவையும் அடிமையாக்கிகொண்டிருக்கிறான். கட்சியின் ஆணைக்கு முன்பு மனிதநேயம் கரைந்துவிடுகிறது. கூடவே, மிகவும் ஆழகாக சமூகம் அரசியல்படுத்தப்பட்டிருப்பதும். அரசாங்கத்தின் ஒவ்வொரு முகத்திலும் அரசியலே ஆணை செலுத்துவதும்.
ஆனால், இன்று, ஒரு வெள்ளிக்கீற்று தென்பட்டிருக்கிறது. அரசியல் சீர்திருத்தத்துக்கு முன்னோடியாக, முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் பகிரங்கமாக மணிக்கு எதிராக வெளிவந்திருக்கிறார். டெல்லியில் இருக்கும் கட்சி தலைமைக்கு இப்படிப்பட்ட செயல்களை நியாயப்படுத்தும் ஒழுக்கமுறையை கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் இரண்டாம் வாரத்தில், இதன் மீது ஏகேஜி பவனில் விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் மலையாளி மனம் பைத்தியக்கார விடுதியிலேயே வாழ விரும்பினால், அது வேறு கதை.
(The writer is Special Correspondent, The Pioneer)
மேலும் படங்கள், வீடியோக்கள் பார்க்க
- காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
- முள்வெளி அத்தியாயம் -11
- தங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்
- தடயம்
- நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..
- காத்திருப்பு
- சந்தோஷ்சிவனின் “ உருமி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15
- தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4
- நான் செத்தான்
- நச்சுச் சொல்
- மாறியது நெஞ்சம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-4)
- ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!
- எஸ்.எழிலின் “ மனங்கொத்திப்பறவை “
- பஞ்சதந்திரம் தொடர் 46
- காத்திருப்பு
- இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை
- சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு
- 2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28
- கேரளாவின் வன்முறை அரசியல்
- துருக்கி பயணம்-4
- அத்திப்பழம்
- கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?
இந்த கட்டுரை செய்தி கசிந்ததை கண்டிப்பது போல இருக்கின்றது தவிர RSS , முஸ்லிம் என்று இழுத்துவிட்டால் இன்னும் கொலைகளை நியாயபடுதிவிடலாம் என்று ஒரு நோக்கத்தில் எழுதப்பட்டது போல இருகின்றது.
எனினும் இன்னொரு உண்மை இக்கட்டுரைகள் படிப்போருக்குத் தெரியப்படுத்தவில்லை.
அது: வடகோடி மாவட்டங்கள், கன்னூர், காசர்கோடு, கோழிக்கோடு – இங்கு நடக்கும் கொலைச்சுற்றுக்கள், கிருத்துவருக்கும் இந்துக்களுக்கும் முசுலீகளுக்குமிடையே நடப்பனவல்ல. ஆர் எஸ் எஸ் சுக்கும், கம்யூனிஸ்டுகளுக்குமிடையே நடப்பன. ஆயினும் கம்யூனிஸ்டுகள் இசுலாமியருக்குச்சார்ப்பாகவும் ஆர் எஸ் எஸ் இந்துக்களுக்குச் சார்பாகவகவும் – இதுவும் தவறு சரியானச்சொல், இந்துதுவாவினருக்கும் – நடாத்தும் கொலைகளே இவை.
இருபுறமும் மாறி மாறி நடைபெறும் கொலைகளை ஒரு சாராரே செய்தார் என்ற பொய்ப்பிரச்சாரத்தை இவ்விரு கட்டுரைகளும் முன்வைக்கின்றன. அல்லது கம்யூனிஸ்டுகள் முன்னாள் கம்யூனிஸ்டுகளைக் கொன்றதை மட்டுமே சொல்கின்றன.
கேரளாவில் ஆர் எஸ் எஸ் சும், கம்யூனிஸ்டுகளும் கொலை செய்யும் அமைப்புக்கள். இருவருக்குமுள்ள ஒரு வேறுபாடு என்னவென்றால் கம்யூனிஸ்டு தலைவர்கள் ஓபனாக அதைச்சரியென்கிறார்கள். இப்போது நடந்த கொலை சரியென்றும் எங்கள் மந்தையில் பிரிந்தவர்கள் நாங்கள் கொல்வது சரியேயென்று பேசி மாணி (மணியன்று) கேரளாவில பரபரப்பையேற்படுத்தினார் சின்னாட்களுக்கு முன். அப்பேச்சுக்காக அவரைக் கைது செய்யவேண்டுமென பல அமைப்புக்கள் கேட்டன. இன்னும் கைது செய்ய்பப்படவில்லை.
ஆர் எஸ் எஸ் தலைவர்கள் அப்படி சொல்லவில்லை. ஆனால் கேரள ஆர் எஸ் எஸ் செய்பவைகளத் தட்டிக்கேட்பதில்லை. கேரள ஆர் எஸ் எஸ் ஓரு பயங்கர அமைப்பாக இன்று தன்னைக்காட்டி வருகிறது. கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும்தான் நாங்கள் எதிரிகள் என்று சொல்லி பயனில்லை. ஒரு மதம் அமைப்பு கொலையே வழியென்பதும், அல்லது தற்காப்புக்குத்தான் கொலைகள் என்பதும் அவர்கள் மதத்தை அவர்களே இழிவுபடுத்துகிறார்கள் என்பதுதான் பொருள்.
நல்லவேளை, ஆர் எஸ் எஸ் தமிழகத்தில் அப்படியில்லை. அப்படியேநடந்தாலும் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறது. எ.கா தென்காசியில் 7 கொலைகள். தமிழக அரசு விஜய்குமாரை அனுப்பி முடிவுக்குக் கொண்டுவந்தது.
வன்முறையே வழியென்பவரை அடக்க ஒரே வழி அரசு ஸ்போன்சோர்டு (போலிசு மூலம்) வன்முறையேயாகும். தமிழகம் அதைத் தொடர்ந்து செய்து தமிழமக்களைக்காப்பாற்றி வருமாக.
கம்யூனிஸத்தின் பெயரால் நடத்தப் படும் கொலைகளால் அந்தத் தத்துவத்தின் மீது ரத்தக் கறை படிந்து விடாது. இந்தியாவில் தொழிற் சங்க இயக்கங்கள் மூலம் தொழிலாளிகளுக்கு அடிப்படை உரிமைகளை உறுதி செய்தவர் கம்யூனிஸ்ட்டுகளே. அரசியல்வாதிகளில் ஊழல் பேர்வழிகளின் சதவீகிதம் மிகக் குறைந்த அளவு இருப்பது கம்யூனிச கட்சிகளில் தான். ஜனநாயகமும் கம்யூனிஸமும் கை கோர்க்கும் வாய்ப்பு இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. “எனது அனுபவத்தின் மூலம், மலையாளி மனத்தின் அடிப்படை குறைபாட்டை என் கண்கள் பார்க்கும்படி வைத்திருக்கிறது. அவன் கட்சி சொல்லுவதற்கு தனது உடலையும் ஆன்மாவையும் அடிமையாக்கிகொண்டிருக்கிறான்.” என்னும் கூற்று சற்றே அவசரமாகப் பதிவு செய்த கருத்து . சமீபத்திய உதாரணம் தெலுங்கானா போராட்டம். பல இளைஞர்கள் பலி ஆனார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் நிறைய உதாரணங்கள் கிடைக்கும். சகிப்புத் தன்மையும் மனித நேயமும் பேசும் தலைமை எந்தக் கட்சியிலும் இல்லை. இது ஒரு தேசியத் துயர். அன்பு சத்யானந்தன்
My mge s based on Shaji Philip’s reportage in IE only.
//கம்யூனிஸத்தின் பெயரால் நடத்தப் படும் கொலைகளால் அந்தத் தத்துவத்தின் மீது ரத்தக் கறை படிந்து விடாது.//
ஏன்?
கம்யூனிஸம் அடிப்படையிலேயே வர்க்க எதிரிகளை தீர்த்து கட்டலாம் என்று சொல்வதாலா? வர்க்க எதிரிகளை தீர்த்து கட்டுவதை மார்க்ஸ், லெனின், மாவோ, ஸ்டாலின் எல்லோரும் தங்களது கம்யூனிஸ கொள்கையாக பறைசாற்றிகொண்டதாலா?
இன்னும் மேலே ரத்தக்கறை படிந்தால் சிவப்பின் மீது ஊற்றப்படும் சிவப்பு கண்ணுக்கு தெரியாது என்பதாலா?
காவ்யா அவர்களே…
கம்யூனிசத்தின் வரலாறே ரத்தம் தோய்ந்தது தான்…..மனித குல வரலாற்றில் நடை பெற்ற மாபெரும் படுகொலைகள் அனைத்தும் ஸ்டாலின், மாவோ, போல்பாட் , மெங்கிஸ்டு வகையறாக்களால் நடத்தப்பட்டதுதான்…..ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களை விட ஸ்டாலினால் கொல்லப்பட்ட ரஷ்யர்களின் எண்ணிக்கை அதிகம்…..
ஆர்.எஸ்.எஸ் கேரளாவில் மட்டும்தான் இருக்கிறதா? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் அப்படி எத்தனை பேரை கொன்று விட்டது? நான் கேரளாவில் சில காலம் வசித்தவன்……இடதுசாரிகள் இந்து இயக்க்த்தினரை பார்ப்பதற்கும் பூனை , எலியை பார்ப்பதற்கும் வித்தியாசமே கிடையாது……
தென்காசி சம்பவம் நடந்தது சென்ற தி.மு. க ஆட்சியில்…..விஜயகுமார் அப்போது தமிழகத்திலேயே கிடையாது….. நக்சலைட் ஒழிப்பு பணியில் , ஜார்கண்ட்டில் இருந்தார்….மேலும் தனது பங்காளிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகளை காப்பாற்ற கருணாநிதியால் ஏவி விடப்பட்ட காவல்துறை செய்த பித்தலாட்டம் அது… அந்த சம்பவம் உண்மை எனில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஏன் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை?
மத வெறி உங்கள் கண்ணை மறைக்கிறது……சேவை என்ற பெயரில் மத மாற்ற அறுவடை செய்யும் கிறித்தவ மிஷனரிகளை அம்பலப்படுத்துவதால் உங்களுக்கு ஹிந்து இயக்கங்களின் மீது வரும் கோபத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது……அதற்காக எதை வேண்டுமானாலும் பிதற்றலாம் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள்…..
// கம்யூனிஸ்டுகள் இசுலாமியருக்குச்சார்ப்பாகவும் ஆர் எஸ் எஸ் இந்துக்களுக்குச் சார்பாகவகவும் – இதுவும் தவறு சரியானச்சொல், இந்துதுவாவினருக்கும் – நடாத்தும் கொலைகளே இவை.//
இதுதான் ஷாஜு பிலிப்பின் இண்டியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை
http://www.indianexpress.com/news/blood-on-the-sickle/957089/0
கம்யூனிஸ்டுகள் முஸ்லீம்களை கொல்வதுதான் இருக்கிறது.
எந்த இடத்தில் முஸ்லீம்களை காப்பாற்ற கம்யூனிஸ்டுகள் இந்துத்துவாவினரை கொல்கிறார்கள் என்று இருக்கிறது?
தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
எப்படியாவது கம்யூனிஸ்டுகளை காப்பாற்றி இந்துத்துவாவை திட்ட என்னவேண்டுமானாலும் கூறலாமா?
சாஜி பிலிப்பின் இந்தக்கட்டுரை அடிப்படையாக வைத்து நான் சொல்லவில்லை. அவரின் முன்னால் கட்டுரைகளை வைத்தே சொல்கிறேன். ஆர் எஸ் எஸ் எவருக்குச் சார்பு என்று சொல்லத்தேவையில்லை. கம்யூனிஸ்டுகள் கண்டிப்பாக இந்துத்வாவினருக்குச்சார்பானவர்களல்ல. அவர்கள் இசுலாமியர்களைக்கொன்றதாக ஜீன் 3ந் தேதி பிலிப்பின் கட்டுரையில், அந்த இசுலாமியர்கள் மதரீதியாக கொல்லப்படவில்லை. அவர்கள் கம்யூனிஸ்டுகட்சியில் இருந்து விலகியதால் கொல்லப்பட்டார்கள் என்றுதான் இருக்கிறது. ஆக முசுலீம்கள் கொல்லப்படவில்லை. முன்னால் கம்யூனிஸ்டுகள்தான் கொல்லப்பட்டார்கள்.
நான் சொன்னது கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர் எஸ் எஸ் சுக்கும் நடக்கும் தொடர்கொலைகள். எக்கொலைகளும் மத ரீதியாக கம்யூனிஸ்டுகளைப்பொறுத்தவரை அங்கில்லை. அவை அரசியல் ரீதியானவை மட்டுமே.
கம்யூனிஸ்டுகள் இந்துத்வாவினரை ஆதரித்தாக நான் எங்கும் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால் முசுலீம்களை ஆதரித்தாக நான் கண்டிருக்கிறேன்.
நான் எது சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஒன்றுமட்டும் உண்மை. கேரள்\ஆர் எஸ் எஸ் வன்முறையை நாடியே தன்னைக்காத்து வருகிறது அங்கே. வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்பது இன்றைய தீவிரவாத இந்துக்களில் கொள்கையாகும். தீவிர முசுலிம்களின் மட்டுமன்று. முசுலீம் தீவிரவாதிகளும் இந்து தீவிரவாதிகளும் குணத்தால் எண்ணத்தால் ஒன்று.
இதைத்தான் கேரளா காட்டுகிறது. நல்லவேளை தமிழ்நாடு இப்படிப்பட்ட தீவிரவாத இந்துக்களின் கைகளில் விழவில்லை தீவிரவாத முசுலீகளின் கைகளிலும் விழவில்லை. விழவில்லையென்றால் குறிப்பிட்ட மத மக்களில் ஆதரவு அவர்களுக்கில்லை. எந்த தமிழ் இந்து கோட்சே காந்தியைக்கொன்றதை சரியென்றான்?
தங்கமணி, இந்துத்வாவென்றால் ஒரே ஒரு முகமன்று. பன்முகம். அதில் ஒரு முகத்தை நாம் திண்ணையிலேயே காணலாம். வன்முறைக்கு வன்முறையே தீர்வென்று ஒரு தீவிரவாத இந்துத்வாவினர் தமிழ் ஹிந்து காமில் எழுத நான் கண்டித்துப் பின்னூட்டம் போட்டிருக்கிறேன் படிக்கவும்.
//சாஜி பிலிப்பின் இந்தக்கட்டுரை அடிப்படையாக வைத்து நான் சொல்லவில்லை. அவரின் முன்னால் கட்டுரைகளை வைத்தே சொல்கிறேன்//
தயவு செய்து அந்த கட்டுரை இணைப்பை தாருங்கள். படித்துவிட்டு சொல்கிறேன்.
மணி !
நான் ஆங்கில பத்திரிக்கைகள் ஒன்றல்ல பலவற்றை நெடுங்காலமாகப்படித்து வருகிறேன். அவற்றுள் வரும் கட்டுரைகளை, என்றோ ஒரு நாள் திண்ணையில் கோடிட்டுக் காட்டவேண்டுமென்று நான் படிப்பதில்லை. அப்படிப்படித்தவைகள்தான் இ.எ வந்த கட்டுரைகள்.
வட கேரள மாநிலங்களில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர் எஸ எஸ் கார்டர்களுக்கும் தொடர் வன்முறை நிகழ்ந்து வருகிறது. தற்சமயம் கம்யூனிஸ்டுகளுக்குள்ளேயே என்றுதான் கதை போகிறது. முன்னது ஓயவில்லை. அஃது எப்போதும் மீண்டும் எழலாம்.
இஃதெல்லாம் கேரளத்தில் வாழ்வோருக்குத் தெரியும். என்னிடம் கேட்பதை விட அவர்களிடமே கேட்டுவிடலாமே !
ஆர் எஸ் எஸ் வன்முறை இயக்கம் அன்று என்று சொல்ல ஆசைப்படுகிறீர்கள். படுங்கள். வேண்டாமேன்று சொல்லவில்லை. ஆனால், அந்த ஆசையில் மண்ணை – கொஞ்சமாவது – அள்ளிப்போடுகிறது வட கேரளமென்பதுதான் வாதம்.
நினைவிருக்கட்டும். மலேகான் நிகழ்வின் சத்வி கைதான பிறகு, ஆர் எஸ் எஸ் தலைவர் பகத் என்ன சொன்னார் தெரியுமா? எங்கள் இயக்கத்தில் வன்முறையாளர்களுக்கிடமில்லை ” ஏன் அந்த நேரம் அச்சொற்கள்?
இதற்கும் எப்போது எங்கே சொன்னார் என்று கேட்டுவிடாதீர்கள்! திண்ணையிலேயே அப்போது எழுதியிருக்கிறேன் அவர சொன்னதை. அல்லது தமிழ் ஹிந்து காமில் இருக்கலாம். எழுதிய நாளில் சின்னாட்களுக்கு முன் செய்தித்தாள்களைப்புரட்டமுடிந்தால் கண்டுபிடித்துவிடலாம்.
நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்து மதமெனபது அவரவருக்கு பிடித்தமாதிரி. தனக்குப்பிடித்தபடிதான் எல்லாரும் வாழ்கிறார்கள் இந்துகளாக என நினைப்பது குண்டு சண்டிக்குள்ளேயிருந்துகொண்டு குதிரை ஓட்டுவதாகும்.
//இஃதெல்லாம் கேரளத்தில் வாழ்வோருக்குத் தெரியும். என்னிடம் கேட்பதை விட அவர்களிடமே கேட்டுவிடலாமே !//
நீங்கள்தானே சொன்னீர்கள்? நீங்கள்தான் ஆதாரம் காட்ட வேண்டும். நானும் வெகுகாலமாக ஆங்கில பத்திரிக்கைகளை படித்து வருபவன் தான். ஆனால் நீங்கள் சொல்லும் பொய்களை படித்ததில்லை.
ஆதாரம் கொடுங்கள். பிறகு மற்றவற்றை பேசலாம்.
ஏதோ வாய்க்கு வந்ததெல்லாம் எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள். ஆதாரம் கேட்டால், இல்லை என்கிறீர்கள்.
இந்த மாதிரி வாய்க்கு வருவதையெல்லாம் எழுதிகொண்டிருப்பவர்களுக்கு பதில் சொல்வது வீண். இவ்வாறு ஆதாரமில்லாமல் வாய்க்கு வந்ததை எழுதுபவர்களை திண்ணை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
இந்தியன் எக்ஸ்பிரசில் ஷாஜு பிலிப் என்று ஒரு நிருபர் தான் இருக்கிறார். அவர் எழுதிய எல்லா கட்டுரைகளையும் பார்த்தேன். காவ்யா சொன்ன விதமாக எதுவும் இல்லை. ஆர் எஸ் எஸ் கேரளாவில் ஆற்றல் உள்ள அமைப்பு அல்ல. பொதுவாக மார்க்சிஸ்ட் கட்சிக்கும் காங்கிரசுக்கும் தான் கேரளாவில் சண்டை, மற்ற மாநிலங்களில் இருவரும் கூட்டனி வைத்தாலும் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் தனியாக் நிற்பார்கள். காவ்யா சொன்ன இந்தச் செய்தியை அவர் உறுதி படுத்தாவிட்டால் திண்ணை அவர் எழுதுவதை பல முறை சரி பார்த்துத் தான் வெளியிட வேண்டும். போது மேடையில் கருத்துத் தெரிவிக்க உரிமை உண்டு. பொய் சொல்லி அவதூறு செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்ட செய்திக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொய்யைச் சொல்லி திசை திருப்புவதை எப்படி திண்ணை அனுமதிக்கிறது? பிற படைப்புகளுக்கு அவர் அளித்த குறிப்புகளைப் பார்த்தாலும் அவர் இந்த உத்தியை வழக்கமாக உபயோகிக்கிறார் என்று தெரிகிறது.
//அவர் எழுதிய எல்லா கட்டுரைகளையும் பார்த்தேன்//
கலை,
எல்லாக்கட்டுரைகளின் தொகுப்புக்களை ஒரே நாளில் படித்துவிட முடியாது. அவை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் போடப்பட்டவை. நூலாகத் தொகுக்கப்படவில்லை. அப்படியிருக்க, எல்லாக்கட்டுரைகளையும் படித்தேன் என்று ஒரே மூச்சில் எப்படி சொல்லவியலும்? நான் எபோதோ படித்த ஞாபகத்தில் எழுத, நீங்கள் எப்படி நான் சுட்டும் கட்டுரையைச் சரியாகத் தேடிப் படித்திருக்க முடியும்? நான் தொடர்ந்து படித்துவருவது, ஸ்டேட்ஸ்மன், த ஹிந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்திய மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ். இதில் நான் சொல்லும் ஸ்பெஷல் ஆர்டிக்கல் எதிலாவது வந்திருக்கலாம். அது ரமேஸ் பாபுவோ, அல்லது பிலிப்பாகவும் இருக்கலாம். எல்லாவற்றையும் படித்தேன் என்று சொல்லமுடியாது. நான் பல்லாண்டுகளாகப்படித்தது, ஒரே நாளில் உங்களுக்குச் சாத்தியமா?
நினைவுகளை வைத்துத்தான் எழுத முடியும். திண்ணை ஆராய்ச்சி இதழன்று. கட்டுரைகளில் ஆதாரங்களைக்காட்டலாம். பின்னூட்டங்களில் எல்லாரும் ஆதாரம் காட்டித்தான் எழுதவேண்டுமென்றால், பொதுவான எண்ணங்களை முன் வைக்கவியலா. எ,கா மதுரையில் ஜாதி உணர்வு அதிகம் மக்களுக்கென்றால், அது சினிமாவில்தான் காட்டப்படுகிறது. மக்களிடம் இல்லை. ஆதாரம் காட்டுங்கள் என்றால் நகைப்புத்தானே?. திண்ணையில் முழுநேரம் உட்கார்ந்து ஆராயச்சிபோல பின்னூட்டம் போட முடியாது. Comments dont need to be backed up always with evidences. Only essays need to.
இப்படி எனக்கு பலமுறை பிற இணைய தள விவாதங்களில் நடந்திருக்கிறது. அங்கே எழுதும்போது இப்படி ஆதாரம் கேட்பார்கள். என்னால் உடனே முடியாது. இன்னொரு நாளில் கிடைக்கும்போது போடும்போது அவர்கள் பேசமாட்டார்கள். அதைப்போல நான் ஷாஜி பிலிப்பு, அல்லது இன்னொரு நிருபர் வட கேரளத்தில் ஆர் எஸ் எஸ் சும், கம்யூனிஸ்டுகளும் மோதுகிறார்கள் என்ற ஆதாரத்தை இன்னொரு நாள் கிடைக்கும்போது வைத்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? இப்போது திண்ணை என்னை தடுத்தால் அப்போது என்ன சொல்லும்?
ஆக காத்திருங்கள்.
சரி, வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பது தீவிர இந்துத்வாவினரின் கொள்கையென்று எழுதினேன் சரியா தவறா? பொய் என்றால் அதை இந்துத்வாவினரான சான்றோன், தங்கமணி, கலை போன்றவர்கள் இங்கேயே சொல்லட்டும். அதைவிட மகிழ்ச்சியான சொற்கள் இருக்கா.
தமிழ் ஹிந்து காமில் மலர்மன்னன் வன்முறையே சரி இந்துக்களுக்க என்றெழுத நான் எதிர்த்து பின்னூட்டம் போட்டது உண்மையா? பொய்யா? எழுதியது மலர்மன்னனே. இதை மலர்மன்னன் இல்லையென்று சொல்லட்டும். வேறொருவர் சொல்லக்கூடாது. His words, as I remember, are that there is no harm if Hindus too resist violence with violence. He implied that as otherwise, they will be completely overwhelmed leaving the place for Muslims and Xians.
அரவிந்தன் நீலகண்டன் மண்டைக்காடு கலவரம் சரியே என கேள்வி பதில் பகுதியில் எழுதியது உண்மையா ? பொய்யா? அவர்கள் அழித்திருந்தால் போச்சு.
தென்காசி கலவரங்களில் 7 நபர்கள் கொல்லப்பட்டது உண்மையா பொய்யா? அவர்கள் இந்து முன்னனியினரும் இசுலாமியர்களும் எனபது உண்மையா ? பொய்யா? அவர்கள் பாமர மக்களில்லையென்பது உண்மையா பொய்யா? அப்போது இருந்த தமிழக அரசு விஜயகுமாரை அனுப்பவில்லையெனபதை அஃது எப்போது எந்த தேதியில் நிகழ்ந்தது என்று சான்றோன் சொன்னால் கண்டுபிடிக்கலாம். சான்றோன் சொல்வாரா? விஜயகுமாரை அனுப்பியது என்பது என் பின்னூட்டத்தில் முக்கியமான விடயமன்று. சென்னையிலிருந்து உயர்போலீசு அதிகாரி அனுப்பப்பட்டார் என்பது உண்மையா பொய்யா? அது கருநாநிதி அரசா ஜெயலலிதா அரசா என்பது வெட்டிக்கேள்வி. தென்காசியில் கலவரம் முசுலீம் மக்களுக்கும் இந்து மக்களுக்கும் இல்லை. இந்து முன்னனியருக்கும் இசுலாம் தீவிரவாதிகளுக்கென்பதே. உண்மையா பொய்யா? எத்தனை பொது மக்கள் இவர்களோடு சேர்ந்தார்கள்?
கம்யூனிஸ்டுகளின் கொள்கை என்னவென்பது கூட எனக்குத்தெரியாது. மார்க்ஸை நான் படித்ததில்லை. அவர்கள் குருதி வெறியர்களா இல்லை சாந்தசொரூபிகளா எனபதன்று இங்கு கேள்வி. ஏன் வெட்டிவாதம்? ஒரு பாமரப்பார்வையில் பார்த்தால், அவர்கள் மற்றகட்சிகளும் ஆர் எஸ் எஸ் சும் செய்யாச்செயல்களைச்செய்து மக்களுக்கு நன்மை செய்தவர்கள் என்பது உண்மையே. எ.கா காஞ்சிபுரத்தில் போராடி, சிவராமன் கொலைவழக்கில் குற்றவாளிகளைத் தேட வைத்தது. ஆனால் ஜெயேந்திரரைக் கைது செய்தபோது ஆர் எஸ் எஸ் தலைவர்கள் எதிர்த்தார்கள் இல்லையா? உத்தபுரத்தில் அவர்கள் போராட்டமே பிள்ளைகளை இறங்கிவரச்செய்தது. இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகள்.
My only point regarding the 2 essays in Thinnai is that, these essays focus on Communists v Communists who are renegades. At the same time, in the same districts, there has been a tussle between the RSS cadres and Communists going on for a long time; which erupts not continuously as they are revenge killings, but sporadically.
Banning me will make Thinnai clean for Hindutva cadres sitting here. Already some of my feedbacks hav been blocked, for e.g the one I wrote vs Devapriya and the ones I wrote apropos Saminathan essay.
Thinnai may introspect if they want to make theirs free for all, or free for Malarmannan, Saminathan, Devapiriya, Sanron, Kalai, Thangamani, Pandians and their ilk.
When I retire to life of leisure from life of active service, I shall devote full time to research. Ok? Not now.
Still dont worry. I can search and put up the evidences shortly when I come back from abroad next month. May wait all of u.
//திசை திருப்புவதை எப்படி திண்ணை அனுமதிக்கிறது//
இரு கட்டுரைகளிலும் இந்த விடயமே சொல்லப்படுகிறது. இதனோடு ஒத்துவரும் இன்னொரு விடயம் சொல்லப்படவில்லையெனபது கட்டுரையைத் திசை திருப்பும் முயற்சியன்று.
மதுரையில் ஜாதிக்கொடுமை என்ற தலைப்பில் கட்டுரை போடப்பட்டால், சிவகங்கை மாவட்டத்திலும் கணடதேவி கோயிலில் தலித்துகளுக்கெதிராக தீண்டாமைக்கொடுமையிருக்கிறது என்று சொன்னால் அது திசை திருப்பும் முயற்சியன்று.
கலை மற்றும் தங்கமணி அவர்களே….
காவ்யா இதை வாடிக்கையாக செய்து வருகிறார்,……எந்த பிரச்சினையை பற்றிய விவாதம் என்றாலும் அவர் அந்த விவாதத்தை திசை திருப்பி ஹிந்துக்களுக்கு எதிரான வாதமாக மாற்றுவார்.. ஹிந்துக்களை துவேஷத்துடன் வசை பாடுவார்…..ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்,…..ஆதாரம் கேட்டால் நழுவி விடுவார்….தின்னை இதுபோன்ற பிதற்றல்களை மட்டுறுத்தலின்றி அனுமதிப்பது கண்டனத்துக்குரியது…..
இதபோலதான் பிராமின் க்கு எதிராக ஒரு உருப்படியான ஆதாரமும் இல்லாமல் கண்டபடி உளறிகொண்டுள்ளார் இந்த காவ்யா .என்னபனுவது , இங்கு அதுபற்றி யாரும் கேள்விகேக்க முடியாது. மறுப்பும் பின்னூட்டமும் தான் சென்சொர் பண்ணப்டுகின்றது .
காவ்யா உங்களை திண்ணையும் பேன் பண்ணவில்லை… ஹிந்து.காமும் பண்ணவில்லை…. வந்தேறிகளுக்கு நீங்கள் விசுவாசமாக இருப்பது பற்றிக் கவலையில்லை.. ஒரு தபா, தீவிரவாதிகளை கண்டித்து அறிக்கை விடுங்கள்… யார் உங்களை பேன் பண்ணுகிறார்கள் என்று பாருங்கள்… அப்புறம் இந்துமதத்தின் அருமை புரியும்… சரி ஜாதி கொடுமைக்கு அக்கறை கொள்ளும் நீங்கள் சௌதி அரெபியாவில் பிற நாட்டு பெண்கள் விலை மாதர்களிலும் கீழாக பணிப்பெண்கள் எனும் பெயரில் நடத்தப்படுவது பற்றி எழுத இயலுமா……..?
அன்புள்ள காவ்யா
உங்களுக்கு இணையம் என்ற இன்டர்நெட் பற்றி ஒருவேளை தெரியாமல் இருக்கலாம். ஒரு பத்திரிகையின் இணையதளத்தில் தேடும் வசதி இருக்கிறது என்பதும் தெரியாமல் இருக்கலாம். இந்தியன் எக்ஸ்ப்ரசில் நீங்கள் தேட நினைக்கும் ஆசிரியர் அல்லது செய்தி பற்றி தேடி எல்லா பதிவுகளையும் படிக்க வசதி உண்டு என்பதும் தெரியாமல் இருக்கலாம். ஒரு ஆசிரியரின் அனைத்து பத்திகளையும் வாசிப்பது அப்படி ஒன்றும் இமாலயப் பிரசினை அல்ல என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். திண்ணை வாசகர்கள் பலருக்கு இப்படி செய்திகள் சேகரிக்கும் அறிவு இருக்கக் கூடும். அவர்கள் உங்கள் பொய்களை சரிபார்க்க முடியும். நீங்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி, இந்தியன் எக்ஸ்ப்ரஸ் அலுவலகம் சென்று பிளிப்பைச் சந்தித்து பேசி அவரிடம் அவர் எழுதிய பத்திகளைப் பற்றி பேசிய பிறகு நிங்கள் சொன்னது பொய் என்று ஒப்புக் கொள்ளலாம். அதுவரை நான் காத்திருப்பேன்.
இந்தக் கட்டுரை மார்க்சிஸ்ட் கட்சியின் உள்கட்சிச் சண்டையில் எப்படி மார்க்சிஸ்ட் கடியின் அதிகார பீடம் தரும் ஆசியுடன் ஸ்டாலின் பெரியா உட்பட தன் கட்சிக்குள் தன்னை விமர்சித்த்தவர்களை தீர்த்துக்கட்டினார், அதே போல இங்கும் மார்க்சிஸ்ட் கட்சி நடந்து கொள்கிறது என்பது பற்றிய கட்டுரை. இதில் ஆர் எஸ் எஸ் எங்கே வந்தது. ஆர் எஸ் எஸ் எப்படி சத்திய சந்தர்கள் என்று இந்தக் கட்டுரையில் எங்கே சொல்லப் பட்டது?