கேள்வி

இரும்படுப்பு அருவாமனை

என்று கூவிப் போகிறாள்

கைக்குழந்தையுடன்

கூடை முறம் வேணுமா

கேட்டுப் போகிறார்

கிழவி ஒருவர்

பால்காரரின் கணகண ஒலி

இன்னும் பரிதாபமாய்க்

கேட்டுக் கொண்டிருக்கிறது

சாணை பிடிப்பவரின்

வண்டிச் சக்கரம்

சும்மா சுற்றுகிறது

ஓலைக் கிலுகிலுப்பைக்

கொடுத்து அரிசி வாங்குபவள்

எங்கே போனாளோ?

பூம்பூம் மாடு இல்லாமல்

மேளச் சத்தம் மட்டுமே

வந்து கொண்டிருக்கிறது

எல்லாமே நவீனமானால்

மரபெங்கே போகும்

என்ற கேள்வி எழுகிறது.

Series Navigationதன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)அறுந்த செருப்பு