கொரோனா கற்றுக் கொடுத்த வாழ்வியல்

Spread the love
கு.மோனிஷா

மலர்ந்த மழலைக்கு மாலை எதற்கு?
அறையில் வாழ்வதே சிறையென ஆனதே! 
இறையிடம் வேண்டியே நாட்கள் போனதே!
பயத்தின் வலியிலே மிதக்கும் நாட்களே!
விடுதலை நாளுக்கு விண்ணப்பம் வேண்டுமோ?
உறக்கம் கலைந்தே உயிர்கள் போனதே !
தொற்றின் பிணியிலே தொடருதே இழப்புகள்!
இருளை துரத்த ஒளியொன்று வேண்டுமோ?
புன்சிரிப்பு பூத்திட வாய்ப்பொன்றே போதும் !
கண்ணீரில் மலர்ந்த புன்னகை போதும் !
தூரம் தொடர்ந்து துன்பம் தொலைப்போம்!
விடிந்த நாட்கள் விரைந்து போகட்டும்!
ஆயுள் காக்க வாயில் காப்போம்!
 
 
,
Series Navigationதில்லிகை | சூன் 12 மாலை 4 மணிக்கு | மாணவர்களிடையே இலக்கியத்தின் தாக்கம்தலைவியும் புதல்வனும்