Posted in

சமூக நல்லிணக்க பூஜையான ஆயுத பூஜை

This entry is part 19 of 23 in the series 14 டிசம்பர் 2014

வைகை அனிஷ்
தமிழகம் மற்றும் அல்லாது இந்தியாவெங்கும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்கின்றனர். அனைத்து சமூகத்தினரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனங்கள், தங்கள் கடைகள், தங்கள் படிக்கின்ற நூல்கள், தாங்கள் பயிற்றுவிக்கின்ற கல்லூரிகள் என அனைத்தையும் கழுவி விட்டு சுத்தம் செய்து பழைய பொருட்களை விலைக்கு விற்பனை செய்து பரன் மற்றும் கேட்பாரற்று கிடக்கின்ற பொருட்களை அப்புறப்படுத்தி அலங்காரம் செய்து ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எவ்வித பாகுபாடு அல்லாமல் தாங்கள் வைத்திருக்கும் சைக்கிளை கூட கழுவி சுத்தம் செய்து கலர் பேப்பர்களை ஒட்டி வாழை மரத்தை வாகனத்தின்முன் கட்டி பொறி, பழங்கள், பொங்கல் என தயார் செய்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்கின்றனர். இது ஒரு வகை தொழிலாளர்கள் திருநாள் என்று கூட பத்திரிக்கை அலுவலகங்கள் கூட தினசரி, வார, வாரமிருமுறை, மாத இதழ் பத்திரிக்கைகள் கூட ஆயுத பூஜை அன்று தங்கள் அலுவலகத்தில் உள்ள இயந்திரங்களை கழுவி சுத்தம் செய்து இயந்திரத்தை நிறுத்திவிடுகின்றனர். தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கின்றனர். தற்பொழுது கல்வி நிறுவனங்கள் கூட இதனை வியாபாரமாக்கி விஜயதசமி அன்று பள்ளியில் சேருகின்ற மாணவர்களுக்கு சிறப்புச்சலுகை, கூடுதல் சலுகை என அட்மிசன் மட்டும் நடைபெறும். ஆனால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்திய சமூக அமைப்பில் தொழிலாளி-முதலாளி என்று பிரித்து பார்க்கும் பார்வை ஆங்கிலேயர்கள் காலமான கி.பி.17 ம் நூற்றாண்;டின் பிற்பகுதியில் இந்திய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று தோன்றுகிறது. கி.பி.18 ம் நூற்றாண்டில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் விளைவாக இப்பார்வை கூர்மையடைந்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது கல்வியின் தெய்வமான சரஸ்வதி பூஜையுடன் இணைத்து கொண்டாடப்படும் ஆயுத பூஜை விழா தொழிலாளர்களுக்கான விழாவாகத் தொடக்க காலத்தில் கருதப்படவில்லை.
நாள் நட்சத்திரம் பார்த்தல், ராகு காலம் எமகண்டம் பார்த்தல் ஆகிய நம்பிக்கைகள் மிகப்பழங்காலத்திலிருந்து ஒரு சிலரால் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றும் திருமணம், பெண்கள் பூப்படைதல், குழந்தை பிறத்தல் போன்றவைகளுக்கு பஞ்சாங்கம் பார்ப்பார்கள். இதில் நல்ல ஓரை, கெட்ட ஓரை என கூறுவார்கள். ஓரை என்ற சொல் காலத்தை வழிநடத்தும் கடவுளாக கிரேக்கர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஹோரா என்பது காலக்கணக்கீடு தொடர்பாக கிரேக்கச் சொல்லாகும். ஆங்கிலத்தில் அவர் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து ஓரை என்ற சொல் பிறந்ததாக கூறுவர்.
இத்தகைய நம்பிக்கைகளில் ஒன்றுதான் அஷ்;டமி, நவமி, திதிகள் பற்றியது. ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் நவக்கிரகங்கள் என்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுக்கும் உரியன என்றும் பிரித்து வைத்துள்ளனர். சில கோயில்கள்களிலும், குடுமியான் மலை உள்ளிட்ட பல இடங்களில் 9 கிரகங்களைப்பற்றி கல்வெட்டுக்களை பொறித்துள்ளனர். இதனை நினைவு கூறும் விதமாக குற்றாலம் கோயிலுள்ள கி.பி.1754 ஆம் ஆண்டைச்சேர்ந்த தென்காசிப் பாண்டியர் ஆட்சியில் இறுதியாண்டுக் காலச் செப்புப் பட்டயங்களில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் தொழில் செய்து வருகிறபேர் என்றும் பொதுமக்கள் குடிபடை செய் தொழிலாளிகளன் என்றும் குறிப்பிடும் படி கல்வெட்டுக்கள் அமைந்துள்ளது.
கிரகங்களின் அடிப்படையில் எட்டு என்பது சனிக்கிரகத்துக்கும் ஒன்பது என்பது செவ்வாய் கிரகத்திற்கும் உரியது என்றும் சோதிட இயல் வல்லுநர்கள் கருதுகின்றனர். சனிக்கிரகம் உடலுக்கு ஏற்படும் உட்காயங்கள், இரத்தக்கட்டு, மூச்சுத்திணறல் ஆகியவற்றுக்குக் காரணம் என்றும் செவ்வாய்க்கிரகம் வெட்டு-குத்து காயங்கள், தீக்காயங்கள், இரத்தக்கொதிப்பு ஆகியவற்றுக்குக் காரணம் என்பது ஜோதிட இயல் தொடர்பான நம்பிக்கைகளாகும். அஷ்டமி, நவமி ஆகியன முறையே சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களுக்குரிய திதிகளாதலால் இந்நாளில் ஒரு செயலைச் செய்யும் போது இக்கிரகங்களின் காரகத்துவத்தால் நோய்களோ ஊறுபாடுகளோ ஏற்பட்டுவிடக்கூடும் என்ற பயத்தில் அஷ்டமி, நவமி திதிகள் நல்ல செயல் அல்ல என ஜோதிடர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் என்பது ஓர் ஆண்டின் ஆறாவது மாதமாகும். அதாவது முதல் ராசியில் சூரியன் நிற்பதாகக் கருதப்படும் சித்திரை மாதம் தொடங்கி, ஆறாவது வீடாகிய கன்னி ராசியில் சூரியன் நிற்பதாகக் கருதப்படும் மாதமே புரட்டாசி மாதமாகும். இம்மாதத்தில் ஆறாவது வீடாக அமைவது கன்னி மாதமாகும். இம்மாதத்தின் வளர்பிறைப் பட்சத்தில் வரும் அஷ்டமி, நவமி திதிகளில் போர்க்கருவிகளைப் போருக்கோ பயிற்சிக்கோ பயன்படுத்தாமல் அவற்றால் தீங்கு நேராமல் காத்துக் கொள்வதற்காக அவற்றை நீராட்டி அலங்கரித்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. போர்க்கலைப்பயிற்சி என்பது பண்டைக்காலத்தில் கட்டயமாக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி காலம் முடிந்த பின்னர் வரும் தசமி திதியை விஜயதசமி என்ற பெயரில் விரதம் முடித்துப் புதிதாகப் போர்க்கலைப் பயிற்சி தொடங்கும் நாளாக வெற்றிக் கருவிகளையும் கருதியுள்ளார்கள். ஆயுதங்கள் முதலான கருவிகளையும் உருவாக்கும் கம்மாளர் குலத்தவர் புரட்டாசி மாதத்தின் இறுதி நாளன்று தமது தெய்வமான விஸ்வகர்மாவுக்கு ஓய்வு நாள் என்று கருதி தமது தொழிற்கருவிகளுக்கு அன்று ஓய்வளிப்பர். விஜயதமசிக்கு முதல் நாளான ஆயுத பூஜை நாளினை மகா நவமி என அழைப்பர்.
கி.பி.15-16 ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியப் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர அரசின் தலைநகரான ஹம்பியில் மகாநவமியன்று அரசர்க்குரிய குதிரைகளின் அபிஷேகம் நடைபெற்றது என்றும், மகாநவமி திப்பா என்ற அரங்கில் அரசர் ஆயுதங்களுக்கு வழிபாடு செய்தார் என்று வரலாறுகள் தெரிவிக்கின்றன. விஜயநகர வீழ்ச்சிக்குப் பின்னர் மைசூர் உடையார் அரச மரபினர் மகாநவமி விழாவினை விமர்ச்சையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இவ்விழாவில் அரசர் தமது படைக்கலன்கள், படைக்கலக் கொட்டில்களில் உள்ள ஆயுதங்களை அலங்கரித்துப் பட்டாடை மலர் மாலைகள் சூட்டி வழிபடுவதும், விஜயதசமியன்று படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளன. மைசூர் தசரா அதாவது பத்து இரவுகள் என்ற பெயரில் அணிவகுப்பு ஊர்வலமும் அம்பு போடுவதும் தற்போதும் வழக்கில் உள்ளன.
அரசன் மற்றும் அரச குலப் பெண்கள் மட்டுமின்றி மேல்தட்டு வர்க்கங்களைப் சேர்ந்த அனைத்துப் பெண்களும் தங்கள் இல்லத்தில் கொலுமண்டபம், அணிவகுப்பு ஆகியவற்றின் அடையாளமாக கொலு பொம்மைகள் வைத்தும் வழிபடும் வழக்கம் உருவாயிற்று. கொலுவுடன் தங்களது தொழிற்கருவிகளையும் கொலுவுடன் குடிபடை செய்தொழிலாளி யரின் வழிபாடாகப் பரிணமா வளர்ச்சியடைந்தது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்தவும் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் ஒரே விதமான தொழில்நுட்ப அறிவினைப் பெருமாறு இந்தியர்களுக்கு அறைகூவல் விடுக்கவும் எழுச்சிய+ட்டவும் இவ்விழா அடையாளச் சின்னமாக மாறியது. ஆயுதங்கள் செய்வோம். காகிதங்கள் செய்வோம். ஆலைகள் அமைப்போம். கல்விச்சாலைகள் அமைப்போம் என்றான் பாரதி. அதே பாரதி கை வருந்தி உழைப்பவர் தெய்வம் என்று ஆயுதங்களின் தெய்வத்தையும், பிரம்மதேவன் கலையிங்கு நீரே என்று அத்தெய்வங்களின் தொண்டர்களாகிய தொழிலாளர்-முதலாளிகளையும் பாடியுள்ளார். இன்று இந்து,முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பூஜையாக ஆயுதப்பூஜை கொண்டாடப்படுவது வேற்றுமையில் ஒற்றுமை மிகுந்த நாடு என்பது இது ஒரு எடுத்துக்காட்டு.

Series Navigationநிலவுக்கு அப்பால் பறக்கக் கூடிய நாசாவின்  புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல்  முதல் சோதனை முடிந்தது(3)  –  யாமினி க்ருஷ்ணமூர்த்தி

8 thoughts on “சமூக நல்லிணக்க பூஜையான ஆயுத பூஜை

  1. ஆயுத பூஜை – வரலாறு தரும் பாடம்!

    தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பிஜப்பூர் சுல்தானின் படைத்தலைவன் வெங்காஜி என்பவனை வேண்டி னான்.
    வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படையெடுத்து வந்த சமயமானது ஆயுத பூஜை சமயமாகும். படை வீரர்களின் படைக் கலங்கள் எல்லாம் ஆயுத பூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.
    மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பிராமண அமைச்சர்களையும், பிராமண குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பிராமண குருக்கள், மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள்! ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத் தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜியாவான். அவனோ ஓர் இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசிச் செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவிவிட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான் என்று சொன்னார்கள்.
    மன்னனும், அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தானும் பிராமணர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரி பஜனைச் செய்துகொண்டு இருந்தான். வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவிந்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும், அனாயசமாகவும் வாயில் கல்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன.
    இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமல தாசன், வெங்காஜி சத்தியம் கெட்டவன், திருமாலின் திருத்துழாய் துளசியினை மதிக்கவில்லை. ஆகவே, அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி, யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து விட்டான்.
    வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தா மலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.

  2. உண்மைதான் ஷாலி. எந்த அனுமானங்களும் இப்படிப்பட்ட ஜிகாதிகளிடம் வேகாது.
    ஜிகாதிகள் சிறு குழந்தைகளை கொல்லமாட்டார்கள் என்று பாகிஸ்தான் ராணுவ மடையர்களே இருந்திருக்கும்போது இந்துக்கள் ஏமாந்ததில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

    பெஷாவர் பள்ளிக்கூடத்தில் 120க்கும் மேலான குழந்தைகளை கொன்று அல்லாவின் அருளை பெற்றிருக்கிறார்கள் இந்த ஜிகாதிகள்.

    முகம்மது படைத்த புத்தகம் அப்படிப்பட்டது!

  3. அம்மணி அம்மா, சொல்வது உண்மைதான்.மத புரோகிதர்களின் ஆலோசனைப்படி தஞ்சை மன்னன் நாட்டை இழந்தான்.ஜிகாதிகள் குழந்தையை கொல்ல மாட்டார்கள் என்ற மூட முல்லாக்கள் போதனையை நம்பிய பாகிஸ்தான் ராணுவம் குழந்தைகளை இழந்தது.மத மூடப் புரோகிதர்கள் இந்து மதத்திற்கு மட்டும் சொந்தம் அல்ல.அவர்கள் எல்லா மதத்திற்க்கும் சொந்தம்.

    கடவுளை வணங்க இடைத்தரகர் புரோகிதர் தேவையில்லை.இப்புரோகிதர்களை நம்பியவர்களுக்கு இவ்வுலகமும் இல்லை;அவ்வுலகமும் இல்லை.மனிதநேயத்திற்கு முட்டுக்கட்டை புரோகிதமே!புரோகிதம் பஞ்சமா பாவங்களை விடப் பெரும் பாவம்! புரோகிதம் ஒழிந்தால் மனிதம் மலரும்!மனிதநேயம் வளரும்!புரோகிதம் ஒழிந்து,மனிதம் மலர, மனித நேயம் வளர அனைவரும் பாடுபடுவோம்!

  4. அன்புள்ள ஷாலி, சுபி, ஐஐஎம்ராமன்,

    முன்பு பெஸ்லானில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்தது பொல இன்று பெஷாவரிலும் செய்திருக்கிறார்கள். அந்த செய்திகளை படித்துவிட்டு உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.

    முகம்மதின் போதனையும் அப்படிப்பட்டதே. இதனை இஸ்லாமிய ஜிகாதிகள் சரியானதென்று நம்புகிறார்கள். அதனால், குழந்தைகளையும் பெண்களையும் கொல்வதை அவர்கள் தவறாக கருதுவதில்லை.

    புஹாரி ஹதீஸ் : 3012
    ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது.
    அப்வா என்னுமிடத்தில் அல்லது வத்தான் என்னுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இணை வைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே என்று பதிலளித்தார்கள்.


    இதற்கு முழநீளம் இந்து தமிழர்களிடம் விளக்கம் சொல்வதற்கு பதிலாக, இந்த ஜிகாதிகளிடம் விளக்கம் சொல்லி, முகம்மது சொன்னது தப்பு என்று விளக்கிவிட்டு வாருங்கள்.

  5. புரோஹிதம் என்றதற்குப் பதிலாக சமயச்சடங்குகள் என்றிருந்திக்க வேண்டும். எக்காலத்திலும் சமயச்சடங்கர்களை ஒட்டு மொத்தமாக சமூஹம் ஏற்கவில்லை. ஏற்பவர்கள்; ஏற்காதவர்கள் என்று ஒருபுறமிருக்க, ஏற்பவர்களுள்கூட பணம் படைத்தோரே அச்சடங்குகளைச்செய்ய முடியும் என்பதுதான் கதை. இன்றைக்கு மணச்சடங்கு செய்ய புரோஹிதர்களுக்கு 4000 கொடுக்க ஏழைகளினால் முடியாது. ஆக, புரோகிதர்கள் இந்துமதத்தை பணக்காரர்களின் மதமாக்கவே அன்றிலிருந்து இன்றுவரை உதவிவருகிறார்கள்.

    ஷாலி சொல்வது, அச்சடங்குகள் கேடே. கேடோ இல்லையோ, அவை நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. அவற்றை ரேஷனலைஷ் பண்ண முடியாது. கடவுள் என்பதே நம்பிக்கை. ரேஷனைலைஸ் பண்ணமுடியுமா?

    எனினும் எதற்கும் எல்லை உண்டு. ஷாலி சுட்டிக்காட்டியச் சான்று எல்லைமீறிய சடங்கு நம்பிக்கை. ஆபத்தில் கொண்டுபோய் முடிந்து விடும் என்பதைக்காட்டவே.

    பெந்தொகொஸ்தோ காரர்கள் மருந்து உட்கொள்வதில்லை. பைபிளைப் படித்தால் சரியாகிவிடும் என்று நம்பி உயிரை சீக்கிரம் விடுவதை ஒத்ததுவே சடங்குகளில் நம்பிக்கையும்.

    இந்துமதம் புரோகிதர்களால் மட்டுமேயில்லை என்பதை அம்மிணி உணர்வாராக.. புரோஹிதத்தையும் பிராமணர்களையும் சேர்க்காமலும் அது வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. வளர்த்தவர்கள் மஹான்கள்.

    பதிலுக்குப் பதில் பொருத்தமாகத்தான் இருக்கவேண்டும். புரோகித்தத்தைச்சொன்னால், முஹமது நபியைக்காட்டுகிறார் அம்மிணி. சரியான பதில் பகவத் கீதையிலேயிருந்தே வருகிறது. செயல் என்று வரும் போது அங்கு இருவரே வருவர் – 1 செய்பவன் – 2. செய்யப்படுபவன். இதில் மூன்றாவது நபருக்கிடமில்லை என்பதுதான் கீதை. அதன்படி, புரோஹிதர்களுக்கிடங்கொடாமல் தஞ்சை மன்னன் தன் கடமையைச்செய்திருந்தால், வெற்றி பெற்றிருந்திருக்கலாம். ஆக, புரோகிதர்கள் கெடுத்தார்கள்.

    அம்மணிக்கு ஒரு கேள்வி. உங்கள் உறவொன்று உயிருக்காபத்திலிருக்க மருத்துவரை நாடிப்போவீர்களா? இல்லை. புரோஹிதரையா? புரோஹிதர் என்றால், ஷாலி சொன்னது தப்பு. மருத்துவர் என்றால், நீங்கள் சொன்னது தப்பு.

      1. ஷாலியைச் சும்மா விட்டு விட முடியுமா? எங்கவூர்ல சொல்வாக: வம்பு சண்டைக்கும் போகக் கூடாது. வந்த சண்டையை விடக்கூடாது. க்ருஷ்ணகுமாரும் பாண்டியனும் செய்யவேண்டிய வேலையை நான் செய்றேன்.

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *