சயனம்

Spread the love

மழைக்கால இரவு
கொசுக்களின் படையெடுப்பில்
உடலிலிருந்து அரை அவுன்ஸ்
இரத்தம் குறைந்தது
வெள்ளத்தில் மூழ்கிய
வாகனத்தின் உள்ளே
இரண்டு சடலங்கள்
பயங்கரத்தை
ஞாபகப்படுத்தும்
மேகத்தின் கறுமை நிறம்
காற்றின் வேகத்தால்
மரங்கள் பேயாட்டம் போடும்
இடி தாக்கியதில்
கோயில் மதில் சுவரில்
விரிசல் விழுந்திருக்கும்
ஆளரவமற்ற வீதியை
மின்னல் படமெடுக்கும்
ஆறு உடைப்பெடுத்ததை
அறியாமல் ஊருசனம்
உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்.

Series Navigationவேறு தளத்தில் என் நாடகம்மனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு