சற்று யோசி

குணா

துயரம் என்பது எண்ண ஓட்டம்

அது உன்னை செயலிழக்க கூடாது

 

மகிழ்ச்சி என்பது தற்காலிக குதூகலிப்பு

அது உன்னை செயலற கூடாது

 

சந்தோஷம் கூடி இருக்க கொண்டாட்டம்

அதுவே குரூரங்களின் கூடாரமாக கூடாது

 

சலனங்கள் நினைப்புகளின் வித்து

அது சஞ்சலங்களாய் தலை தூக்க கூடாது

 

துக்கம் கடந்த கால நினைவலைகள்

அது கடந்து போக வேண்டியது

 

கோபம் இயலாமையின் உச்சகட்டம்

நிதானத்தால் தவிர்க்க வேண்டியது

 

பொறுமை பக்குவத்தின் மேம்பாடு

காலத்தால் வேண்டிய கட்டாயம்

 

அமைதி ஆரவாரங்களின் இறுதிநிலை

அனைத்திற்குமான இறுதிகட்டம்

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationவாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….பூ