சாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம்

Spread the love

சாகித்திய அகாதெமி விருது

குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம்

குறிஞ்சிசெல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான (2012 ) ‘சாகித்ய அகாதெமியின்’ பால சாகித்ய புரஷ்கார் விருது கிடைத்துள்ளது.

நிவேதிதா புத்தகப்பூங்கா வெளியிட்ட ’காட்டுக்குள்ளே இசைவிழா’ எனும் சிறுவர் நூலுக்கு இந்த விருதை குறிஞ்சிச் செல்வர் பெறுகிறார்

குறிஞ்சிச் செல்வர் கொ. மா. கோதண்டம் அவர்கள், 15. 9. 1938 இல் கொட்டுமுக்கல மாடசாமி ராஜாவுக்கும், சீதாலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார். மனைவி ராஜேஸ்வரிகோதண்டம் எம்.ஏ. ஹிந்தி படித்தவர். 15 நூல்கள் எழுதியவர். இரு மகன்கள், குறளமுதன், இளங்கோ .

நாவல், சிறுகதை, நாடகம், உரை, ஆய்வு, தொகுப்பு முதலிய துறைகளில் 100 நூல்களுக்கு மேல் வெளிவந்துள்ளன.

இவரின் முதல்நூல் ‘ஆரண்ய காண்டம்’ குடியரசு தலைவர் விருது பெற்றது. பின்னர் தமிழக அரசு விருது,இலக்கிய சிந்தனை விருது,வள்ளியப்பா விருது,குழந்தை எழுத்தாளர் சங்க விருது, இலங்கை தமிழ் பல்கலைக்கழக விருது,இலண்டன் தமிழ்ச் சங்க விருது, கலை இலக்கியப் பெருமன்ற விருது என பல்வேறு பரிசுகளை பெற்றுக் குவித்தார்.

2007 ல் மலேசிய சர்வதேச தொலைநிலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது.

சிவசைலம் முதல் ஏற்காடு கொடைக்கானல் மலைகளில், அடர்வனங்களில், மலைமக்கள் குடிசைகளில், அவர்களுடன் குகைகளில், ஆற்றங்கரைகளில் தங்கி பல தடவைகள் பல நாட்கள் வனங்களில் சுற்றி தாவரங்கள். அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள், பற்றி ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமாக நூல்கள் எழுதியவர்.

செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் நாட்டுப்புற இலக்கிய ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.

ருசியன்,ஆங்கிலம்,தெலுங்கு,வங்காளம்,ஜெர்மனி,பிரெஞ்சு,இந்தி,சிங்களம் என பல்வேறு மொழிகளில் இவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இவரது படைப்புகளை ஆய்வு செய்தது இருவர் டாக்டர் பட்டமும், எழுவர் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளனர்.

திருக்குறள் உரை, திருவள்ளுவர் இன்ப நாடகம் எழுதியவர். புதுக்கவிதையில் முத்தொள்ளாயிரம் எழுதியுள்ளார். மணிமேகலை இலக்கியத்தை நாடகமாக எழுதியவர். மணிமேகலைக்கு உரை எழுதியவர். புதுக்கவிதையில் மணிமேகலை எழுதியவர்.

வணங்குகிறோம்.வாழ்த்துகிறோம்.

அறிந்தவர்கள் தொடர்புகொள்ள கொ.மா.கோ அவர்களின் அலைபேசி : 9944415322

 

–கொ.மா.கோ.இளங்கோ

 

 

முகவரி

கொ.மா.கோ.இளங்கோ

2 / 11  , ராஜு தெரு ,

மேற்கு கே.கே.நகர்,

சென்னை – 78

600078

Series Navigationகாலத்தின் விதிமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -41